அடுத்த படம் தமிழில் தான் ! ஆனால்…ஹீரோ ? அட்லீ கொடுத்த சுவாரசியமான தகவல்

0
3443
director atlee
- Advertisement -

இயக்குனர் அட்லி விஜயயை வைத்து மெர்சல் படம் எடுத்த பிறகு இவருக்கு ஏகப்பட்ட கிராக்கி ஆகிவிட்டது.மேலும் மெர்சல் படம் 250 கோடி வசூல் சாதனையை படைத்தாலும் அதனை திரையிட்ட தியேடர் உரிமையாளர்கள் அந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

atlee

இந்நிலையில் அட்லீ தனது அடுத்த படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான அல்லு அர்ஜுன், பிரபாஸ், பவன் கல்யாண் இவர்கள் மூவரில் யாரையாவது வைத்து படம் எடுக்கப்போகிறார் என்று தகவல்கள் வந்தது.ஆனால் இந்த தகவலையும் முற்றிலுமாக மறுத்துவிட்டார் அட்லீ.சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்ட அட்லீயிடம் உங்களின் அடுத்த படம் என்ன?யாரை வைத்து எடுக்கப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பபட்டது.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த அட்லீ கண்டிப்பாக என்னுடைய அடுத்தப்படம் தமிழ் படம் தான்,ஆனால் ஹீரோ யார் என்பது சர்ப்ரைஸாக வரும், அது மட்டுமின்றி நான் தெலுங்கில் படம் எதுவும் இயக்கவில்லை என்றும் கூறியுள்ளார் அட்லீ.இதனால் அட்லீ எடுக்கப்போகும் அவரின் அடுத்த தமிழ் படத்தில் யார் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement