அட்லீயை கலாய்த்து கீர்த்தி சுரேஷ் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். இவர் முதலில் இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
அட்லீ குறித்த தகவல்:
கடைசியாக இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. இதை அடுத்து இவர் தன்னுடைய அடுத்த படத்தின் வேலையில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

பேபி ஜான் படம்:
தற்போது இவர் தெறி படத்தினுடைய இந்தி ரீமேக்கை தயாரித்திருக்கிறார். பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேபி ஜான் படத்தினுடைய பிரமோஷன் நிகழ்ச்சியில் அட்லீ தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டிருந்தார்.
https://www.youtube.com/shorts/iNNWbp0cLPk
கீர்த்தி-அட்லீ வீடியோ:
அப்போது பிரியா அட்லீ, கீர்த்தி சுரேஷ் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அதை அட்லீ தான் எடுத்தார். ஆனால், அட்லீ புகைப்படம் எடுப்பதிற்க்கு பதில் வீடியோ எடுத்திருக்கிறார். இதை பார்த்த கீர்த்தி சுரேஷ், என்னடா வீடியோ எடுத்து வச்சிருக்க என்று கேட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல்:
இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. இறுதியாக இவர் நடித்த ரகு தத்தா படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவர் ஆண்டனி தட்டில் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.






