அட்லீயும் நானும் இந்த இடத்தில் இருந்துதான் ‘காபி’ அடித்தோம் போதுமா.! இயக்குனர் கொடுத்த ஷாக்

0
765
Atlee

இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘டிக் டிக் டிக்’. ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இந்த படம், இந்தியாவின் முதல் விண்வெளி சம்மந்தபட்ட படம் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால், இந்த படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்,அட்லீ காபி அடித்த அதே படத்தில் இருந்து தான் தானும் காபி அடித்தேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

atlee

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ஒரு ‘காபி கேட்’ என்று அழைக்கப்பட்டாலும், இவர் எடுக்கும் படங்கள் எப்படியோ ஹிட் அடித்து விடுகின்றது. தமிழ் சினிமாவில் வந்த பழைய கதைகளை சுட்டு அதில் சில தனக்கு தெரிந்த தந்திரங்களை பயன்படுத்தி மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார் அட்லீ.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘டிக் டிக் டிக்’ படத்தில் ஜெயம் ரவி ஒரு மேஜிஷியனாக நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தராஜானிடம் ‘அட்லீ படத்திலும் சரி, உங்கள் படத்திலும் சரி ஒரே மாதிரி மேஜிக் காட்சி வருகின்றதே’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

Shakti Soundar Rajan

இதற்கு பதில் கூறிய அவர் ‘அட்லீயும் நானும் ஒரே ஹாலிவுட் படத்தில் இருந்து தான் காப்பி அடித்தோம், போதுமா, ஒரு மேஜிக் செய்பவன் வேறு எப்படி செய்வான்.’ என்று காட்டமாக கூறியுள்ளார். சமீபத்தில் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்திலும் விஜய் ஒரு மேஜிஷியனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.