படம் இப்படித்தான் இருக்கும்.! விஜய் 63 பற்றி அட்லீ கொடுத்த தகவல்..! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்.!

0
358
vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அடுத்து இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய்.

vijay and atlee

ஏற்கனவே இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான “தெறி” மற்றும் “மெர்சல் ” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அட்லீ- விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது. ஏ ஜி எஸ் நிறுவனம் தரிக்கவிருக்கும் இந்த படத்தில் “தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி ” என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கியரா அட்வானி விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றி இயக்குனர் அட்லீ சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில் ‘படத்தின் கதை பயங்கரமா வந்திட்டிருக்கு.இந்த படத்தை வேற தரத்திற்கு கொண்டு போகணும்னு வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். கூடிய சீக்கிரமே பயங்கரமா, மாசான ஒரு அறிவிப்பு வரும். இந்த முறை நான் பயப்படுவே மாட்டேன். தற்போது தைரியம் கூடியுள்ளது. அதனால் இந்த படத்துல இதுவரை பண்ணாத ஒரு விசயத்தை பண்ணனும்னு நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

atlee

ஏற்கனவே இயக்குனர் அட்லீ அவர்கள் விஜய்யை வைத்து எடுத்த ‘மெர்சல்’ படம் பல்வேறு அரசியல் எதிர்ப்புகளை சந்தித்து. அதிலும் குறிப்பாக ஜி எஸ் டி குறித்த சில வசனங்களை அந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பல அரசியல் குறுக்கீடுகளும் இருந்தது. இதனால் இயக்குனர் அட்லீக்கு பல எதிர்ப்புகளும் வந்தது. எனவே, நடிகர் ‘விஜய் 63’ படத்தில் மெர்சலை விட மஸான சில காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மேலும், இந்த படத்திற்கு திட்டமிட்ட தொகையைவிட பட்ஜெட் அதிகமானால், அந்தப் பணத்தை அட்லியின் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளப்படும் என்றும் அட்லிக்குக் கறார் கண்டிஷன் போடப்பட்டிருக்கிறது ஏ ஜி எஸ் நிறுவனம் . அத்தனை நிபந்தனைகளையும் முழுமையாக ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறார், அட்லி. எனவே, இந்த படத்தை மிகவும் தெளிவாக திட்டமிட்டு ஒரு மாஸ் படமாக கொடுக்க அட்லீ மூளையை கசிக்க வருகிறாராம்.