தனது மனைவி ப்ரியாவுடன் ஹனி மூனுக்கு சென்றிருந்த அட்லீ தற்போது மீண்டும் சென்னை வந்துள்ளார். அத்துடன் சேர்த்து அடுத்த படத்திற்கான வேலைகளை மும்முரமாக துவங்கிவிட்டார்.
ராஜா ராணியில், ஜெய் மற்றும் ஆர்யா என இரண்டு ஹீரோக்களை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தவர், தற்போது தனது 4ஆவது படத்தில் 3 ஹீரோக்களை வைத்து ஸ்க்ரிப்ட் எழுத தயாராகிவிட்டார். கமர்சியலாக படத்தினை ஹிட் கொடுத்து பழகிவிட்ட அட்லீக்கு 3 ஹீரோ என்பது அல்வா சாப்பிடுவது போல தான் இருக்கும் என்பதில் நிதர்சனம் இல்லை.
ஆனால், மூன்று ஹீரோ என்ற அறிவிப்பு வந்தவுடன் இது எந்த படத்தின் காப்பியாக இருக்கும் என பழைய படங்களை தேட ஆரம்பித்துவிட்டனர் விமர்சகர்கள்.சினிமாReading time · 1 min




