விஜய்- ஷாருக்கான் வைத்து அட்லீ படம் இயக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் சினிமா எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.
பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார். இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான்.
அட்லீ திரைப்பயணம்:
இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
ஜவான் படம்:
இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பலரும் இந்த படத்தை பார்த்து அட்லியையும் ஷாருக்கானையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். அதிலும் இந்த படத்தை பிகில், மெர்சல், தெறி, சர்தார், துணிவு, ஆரம்பம், மங்காத்தா, கத்தி, சிவாஜி,, ராஜா ராணி, துப்பாக்கி என எல்லா படங்களின் கலவை தான் ஜவான் என்று கூறி இருக்கிறார்கள்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
அதிலும் சிலர், இந்த படத்தினுடைய கதை அப்படியே அஜித் நடித்த ஆரம்பம் படம் மாதிரியே இருக்கிறது என்றெல்லாம் கிண்டல் செய்து இருந்தார்கள். இப்படி ஜவான் படம் படுதோல்வி அடைந்திருப்பதை குறித்து நெட்டிசன்கள் அட்லீயை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள் . இந்த நிலையில் சமீபத்தில் அட்லீ பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் ஜவான் படத்திலேயே விஜய் வைத்து கேமியா ரோல் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.
அட்லீ அளித்த பேட்டி:
ஆனால், இது குறித்து விஜய் இடம் நான் கேட்கவில்லை, அதற்கு காரணமும் இருக்கிறது, சாருக்கான்- விஜய் இருவரும் என்னுடைய வாழ்நாள் திருப்பம் அளித்தவர்கள். இருவரையும் ஒரே படத்தில் கொண்டுவரும் வகையில் ஒரு திரைகதையை ஒரு நாள் எழுதுவேன். கண்டிப்பாக இருவரையும் சேர்த்து திரையில் பார்க்கலாம் என்று கூறியிருந்தார். இதற்கு பலர் அட்லீக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.