விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் TTF மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு – எந்தெந்த பிரிவுகளில் தெரியுமா ?

0
430
TTF
- Advertisement -

சமூக வளைத்ததில் பைக் சாகசங்கள் செய்து 2k கிட்ஸ் ரசிகர்களை சம்பாதித்த TTF வாசன் தற்போது பைக் சாகசத்தால் விபத்தில் சிக்கி இருக்கிறார். ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த டிடிஎஃப் வாசன் தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு அவருடைய புல்லட்டை ஓட்ட பழகிய அவர் நாளடைவில் புல்லட்டை மீது ஏற்பட்ட பிரியம் காரணமாக அதையே தனது வேலையாகவும் மாற்றினார். பைக்கில் இந்தியா முழுவதும் பயணிக்கும் அவர் அதனை எல்லாம் வீடியோவாக எடுத்து தனது youtube சேனலில் பதிவேற்றி வந்தார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் பெருமளவு பார்வையாளர்கள் அவருக்கு வரவில்லை என்றாலும் நாளடைவில் அவருக்கு சிறுவர்கள் இடையே ஆதரவு பெறுகியது.அதன் காரணமாக அசுர வளர்ச்சி அடைந்த அவரது யூடியூப் சேனலில் தற்போது 27 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். குறிப்பாக சிறுவயது வாலிபர்கள் அவர் வேகமாக பைக் ஓட்டுவதையும், பைக் ஸ்டண்ட் செய்வதையும் பார்த்து பிடித்து போக அவர்களுக்கு பைக் மீதுள்ள மோகம் காரணமாக அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

என்னதான் இவருக்கு 2k கிட்ஸ் ஆதரவு இருந்தாலும் இவர் இளைஞர்களுக்கு ஒரு தவறான உதாரணம் என்று தான் பலர் கூறி வருகின்றனர். இவர் மீது பல முறை சாலை விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட போதிலும் இவர் அடிக்கடி பொது சாலையில் விதி மீறல்களை செய்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து கோர விபத்தில் சிக்கியுள்ளார்.

அடிக்கடி பைக் ட்ரிப் செல்லும் TTF வாசன் நேற்று விலை உயர்ந்த ஹயபுஸா பைக்கில் சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்று ‘வீலீங்’ செய்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி தூக்கி வீசியது. இதில் டி.டி.எப்.வாசன், மோட்டார்சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு பலமுறை குட்டிக்கரணம் அடித்தபடி கீழே விழுந்தார்.

-விளம்பரம்-

அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த டி.டி.எப்.வாசனை மீட்டு காஞ்சீபுரம் அருகில் உள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அவருக்கு அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ttf வாசன் ரசிகர்கள் சிலர் TTF வாசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

அதே சமயம் பெரும்பாலான மக்கள் பலர் இது போன்று போது சாலையில் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் இவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேணும் என்றும் இவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். அதே போல ttf வாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கையில் மாவு கட்டுடன் இருக்கும் TTF எழுந்து உக்கார கூட முடியாமல் வலியால் துடித்து இருக்கிறார். வீலிங் செய்து மாஸ் காட்ட நினைத்து இப்படி மாவு கட்டு போட்டு பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளார் இந்த 2k பைக் ரைடர். அதேபோல உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது கவனக்குறைவாக செயல்பட்டது போன்ற பெரியவர்களின் கீழ் டிடிஎஃப் வாசல் மீது பாலு செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement