சி.வி. சண்முகம் ஆறு மணிக்கு முன் வேறு மாதிரி பேசுவர் ஆறு மணிக்கு மேல் வேறு மாதிரி பேசுவார் – அண்ணாமலை.

0
1176
- Advertisement -

சில காலமாகவும் அதிமுக மற்றும் பாஜக  கூட்டணியில் பனிப் போர் நிலவு வருகிறது அதற்கு காரணம் என்னவென்றால் அண்ணாமலை அண்ணாவை விமர்சித்து பேசி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் சி.வி சண்முகம்  ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜூ  போன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் அவர்கள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதில் விழுப்புரத்தில் நடந்த அண்ணாவின் பிறந்தநாள் பொது கூட்டத்தில் கலந்து கொண்ட சி.வி சண்முகம் “சரித்திரம் தெரியாமல் நேற்று மழையில் முளைத்த காளான் இன்றைக்கு புதிது புதிதாக எல்லாம் தலைவர்களும் வந்துள்ளது” என்று அண்ணாமலை அண்ணா விமர்சனம் செய்து பேசியதை விட அண்ணாமலை விமர்சனம் செய்து பேசி இருந்தால் சி.வி சண்முகம்.இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் அண்ணாமலை சி.வி சண்முகத்திற்க்கு பதில் அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

அண்ணாமலை கூறியது:

அண்ணாவைப் பற்றி பேசுபவர்கள் என்றால் அண்ணாவின் வழியில் நடந்து கொள்கிறார்களா அவ்வாறு நடந்து கொண்டால் அவர்கள் சொல்வதை நான் கேட்கின்றேன். சரித்திரத்தை மறைத்து பேச வேண்டிய அவசியம் எங்கள் கிடையாது. அவர் இருக்கும் வரை குடும்ப அரசியலை எதிர்த்து வந்தார் எங்களுக்கு கொள்கையில் வேறுபாடு இருக்கலாம். ஐயா கருணாநிதி  பற்றி மரியாதை தான் பேசுவோம் திமுக மீது விமர்சனம் இருந்தாலும் அவரை மரியாதையாக தான் பேசுவோம். நாங்கள் யாரையும் கடவுளாக பார்ப்பது கிடையாது எங்களை பொறுத்தவரை அனைவரும் அனைவருக்கும் தான். எங்களுடைய கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கின்றார்கள் ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.

- Advertisement -

முத்துராமலிங்க ஐயா சனாதனம் பற்றி என்ன பேசினார் என்பது கூறுவது என்னுடைய கடமை. இதை யாரும் மறைத்தும் திருத்தும் பேச முடியாது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்துராமலிங்க தேவர்  அய்யாவுடைய புகழை கூற வேண்டும் அவர் என்ன கூறினார் என்று உலகிற்கு கூற வேண்டும். சி.வி சண்முகம் ஆறு மணிக்கு மேல் ஒரு மாறி பேசுவார் அதற்க்கு முன் வேறு மாறி பேசுவார். எங்களுக்கென்று தனி கட்சி தனி கொள்கை சனாதனம் எங்கள் உயிர் மூச்சு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது மாற்றி மறைத்து பேசுவதற்காக நான் எதற்கு இந்த கட்சியின் தலைவர் ஆக இருக்க வேண்டும்.

நான் யாரையும் எங்கேயும் அவர்களை சிறுமைப் படுத்த மாட்டேன். நான் மற்றவர்கள் போல எம்எல்ஏ ஆக வேண்டும் அதன் பின் மந்திரியாக வேண்டும் என ஆட்டைய போட்டு நினைப்பவர் நான் கிடையாது. சனாதனத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் காப்பாதற்காக நான் இங்கு அரசியலுக்கு வந்திருக்கின்றேன். எனது என்னுடைய பேச்சு சற்று சூடாகத் தான் இருக்கும். என்னை செருப்பால் அடித்தால் கூட  தாங்கிக் கொள்வேன் ஆனால் என்னுடைய நேர்மையையும் காவல்துறையையும் கொச்சைப்படுத்தினால் நான் விடமாட்டேன்.

-விளம்பரம்-

வரவன் போறவன் எல்லாம் மேடையில் போலீஸ்காரர்களைப் பற்றி அவதுறாக பேசி வருகின்றனர். அரசியல் சீனியர் ஜூனியர் என்ன என்ன இருக்கின்றது. அரசியலைப் பொறுத்தவரை பக்குவம் என்பது எந்த வயதிற்கும் வரலாம். பக்குவம் என்பது 50 வயதிலும் வரலாம் அவர்களுக்கு அல்லது 21 வயதிலும் வரலாம். நீங்கள் பலமுறை அமைச்சராக இருந்தால் உங்கள் காலில் என்ன வந்துவிட வேண்டுமா அவ்வாறு விட முடியாது. எங்களைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி யாரிடமும் தலை வணங்காது அனைத்து கட்சியும் எங்களுக்கு சமம் தான். என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

Advertisement