பிரியாவ விடுங்க. அட்லீ இவ்ளோ சூப்பரா டான்ஸ் ஆடுவாரா – அரபிக் குத்து பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க.

0
888
atlee
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார். விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடிகை சமந்தாவும் ஏர்போர்ட்டில் அரபி குத்து பாடலுக்கு செம குத்து போட்டிருந்தார்.

- Advertisement -

அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய அட்லீ-பிரியா:

அந்த வகையில் தற்போது இயக்குனர் அட்லிக்கும் அவரது மனைவி பிரியா, கலை இயக்குனர் முத்துராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தின் அரபி குத்துப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். மேலும், இந்த வீடியோவை அட்லி மற்றும் பிரியா தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ளார்கள். அந்த வீடியோவை பார்த்தால், நம்ம அட்டிலியா! இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நடனமாடியிருக்கிறார். மேலும், இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி கருத்து போட்டு வருகின்றனர்.

அட்லீயின் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அட்லீ. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். மேலும், இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

-விளம்பரம்-

அட்லீ இயக்கும் புது படம்:

பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனே நகரில் தொடங்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அட்லீ-பிரியா பற்றிய தகவல்:

இந்த படம் ஒரு வங்கியை ஹீரோ கொள்ளையடிக்கும் கதை அம்சத்தை கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. அதோடு ‘லயன்’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. இதனிடையே அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் பல சீரியல்கள், படங்களில் நடித்து இருக்கிறார். திருமணத்திற்கு பின் பிரியா சினிமாவை விட்டு விலகி விட்டார்.

Advertisement