மெர்சல் படத்திற்கு அட்லீக்கு இத்தனை கோடி.! அவர் பாதுகாவலர்களுக்கு வேறு இவ்வளவாம்.!

0
472
Mersal

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவந்த வேலையில் ஒரு சில அரசியல்வாதிகளின் இலவச ப்ரோமோஷனால் சர்வதேச அளவில் இந்த படம் கவனத்தை ஈர்த்தது

ஜிஎஸ்டி வரி, அரசியல் கட்சிகளை விமர்சித்தல் போன்ற பல காட்சிகள் இருந்ததால் இந்த படத்தை பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்த்தனர் இருப்பினும் இந்த படம் சர்வதேச அளவில் வெற்றி அடைந்தது இந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.

- Advertisement -

மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் நல்ல லாபத்தை ஈட்டியது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இயக்குனர் அட்லீ வாங்கிய சம்பளம் குறித்து வெளிப்படையாக பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜன் பேசுகையில், மெர்சல் ஒரு சுமாரான படம்தான். ஆனால், ஒரு சில அரசியல் கட்சிகளின் இலவச விளம்பரத்தால் அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்காக இயக்குனர் அட்லிக்கு சுமார் 5 கோடி வரை சம்பளம் தரப்பட்டது. அத்தோடு அவருடன் பாதுகாவலராக வந்த நான்கு, ஐந்து பேருக்கும் தினமும் சம்பளம் வழங்கப்பட்டது. 5 கோடி சம்பளம் வாங்கும் தனக்கு பாதுகாப்பாக வரும் நபர்கள் கூட சம்பளம் கொடுக்க மாட்டாரா என்ன ? என்று நேரடியாக அட்லியை தாக்கிப் பேசியுள்ளார் தயாரிப்பாளர் ராஜன்.

-விளம்பரம்-
Advertisement