இந்த படத்தின் கதை டிஸ்கஷனுக்கு இத்தனை லட்சம் செலவு செய்தாராம் அட்லீ . விவரம் இதோ.

0
888
atlee
- Advertisement -

சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ கடந்த 2013ம் ஆண்டு ஆர்யா,ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார். இந்த படம் அட்லீ தமிழ் சினிமா உலகில் முதலில் இயக்கிய படமாகும். பின் ராஜாராணி படத்தைத் தொடர்ந்து அட்லீ தளபதி விஜய் அவர்களின் “தெறி” படத்தை இயக்கினார்.

-விளம்பரம்-

இயக்குனர் அட்லீ இந்த படத்தின் மூலமே ரசிகர்களிடையேயும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும்,அட்லீ விஜயை வைத்து ‘மெர்சல்’படம் இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் படமாக மாறியது.இதை தொடர்ந்து விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்து பிகில் படத்தை இயக்கி இருந்தார். விஜய்யை வைத்து அணைத்து படமுமே மாபெரும் ஹிட் அடைந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தெறி படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதற்கு முன்பாகவே வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் கதை டிஸ்கஷன் சென்றிருக்கிறது பின்னர் அந்த படம் கலைப்புலி தாணுவிடம் வந்த பின்னர் வி கிரியேஷன்ஸனிற்கு ஸ்டோரி டிஸ்கஷனுக்காக பணம் தர வேண்டும் என்று அட்லி, தாணுவிடம் கூறியிருக்கிறார். தானுவும் எவ்வளவு என்று கேட்டதற்கு 95 லட்சம் என்று கூறியதாக பிரபலமான சினிமா விமர்சகர்களான வலைப்பேச்சு தங்களின் யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள்.

இயக்குனர் அட்லீ ஏற்கனேவே தெறி மற்றும் மெர்சல் படத்தில் எமி ஜாக்சன் மற்றும் வடிவேலுக்கு தேவைல்லாமல் பல கோடியை விரயம் செய்ததால். இந்த படத்தில் ஏ ஜி எஸ் நிறுவனம் அட்லீக்கு சில கட்டுப்பாடுகளை அதில் முக்கிய ஒன்றாக இந்த படத்தில் அட்லீ கூறிய பட்ஜெட்டை விட கூடுதலாக ஆகும் செலவை அட்லீயின் சம்பளத்தில் இருந்து தான் பிடிக்கபடும் என்று கறாராக ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று அப்போது தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement