மீண்டும் மாணிக் பாட்ஷா ? இரண்டாம் முறையாக இரண்டாம் பக்கத்தில் ரஜினி. அசத்தும் அட்லீ.

0
49461
atlee
- Advertisement -

சினிமா உலகின் ஜாம்பவான் ரஜினிகாந்த் அவர்களின் “பாட்ஷா” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அட்லி இயக்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரஜினிகாந்த் ரசிகர்கள் பயங்கர உற்சாகத்திலும், சந்தோஷத்திலும் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.மேலும், தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பிகில்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறது. மேலும், பிகில் படம் குறித்து ரசிகர்கள் இணையங்களில் கலவையான விமர்சனங்கள் தந்தாலும் வசூலில் பிகில் படம் தெறிக்க விட்டது. இந்நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது.

-விளம்பரம்-
Image result for atlee rajinikanth"

அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லீ அவர்கள் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் அட்லீயிடம் “பிகில் 2” எடுக்க திட்டம் இருக்கிறதா! என கேட்டிருந்தார்கள். அதற்கு முன்னரே பிகில் படத்தில் ‘ராயப்பன்’ கதாபாத்திரம் மக்களை வெறித்தனமாக கவர்ந்தது. மேலும், இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ‘ராயப்பன்’ மட்டும் வைத்து படம் எடுங்கள் எனவும் கூறி இருந்தார்கள். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் அட்லீ கூறியது, “ராயப்பன் யார்? அவருடைய பின்னணி என்ன? மைக்கேல் எப்படி பிகில் ஆனார்? என பல்வேறு கேள்விகளை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என யோசித்தேன். ஆனால், அந்த படத்தை இப்போது எடுக்க முடியவில்லை. மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க யோசனை எழுப்பி இருக்கிறது என்றும் கூறினார். மேலும், அவர் நிச்சயமாக ‘பாட்ஷா 2’ படம் எடுக்க எண்ணம் இருக்கிறது.

- Advertisement -

மேலும், இதுவரை தமிழ் சினிமா துறையில் வெளிவந்த ஆக்ஷன் படங்களில் பாட்ஷா படம் தான் செம்ம பிளாக்பஸ்டர் படம். மேலும்,பாட்ஷா 2 படத்திற்கான கதை தயாராக இருக்கிறது என்றும், நம்ம தலைவர் ரஜினிகாந்த் ஓகே என்று சொன்னால் ஷூட்டிங்க்கு போக வேண்டியது தான் என்றும் அட்லி சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். 1995 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ‘பாட்ஷா’ படம். இந்த படத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன்,சரண்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை 2012ஆம் ஆண்டு ஹிந்தியில் மொழியில் வெளியிட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் அவர்களின் ‘அபூர்வ சகோதரர்கள்’ பட வசூலை முறியடித்து சாதனை படைத்த படம் என்றும் கூறப்படுகிறது.

Atlee-rajini

இந்த படத்திற்கு தேவா அவர்கள் இசை அமைத்துள்ளார்கள். இந்த படம் மக்களிடையேயும் ,ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் கூட சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் திரையுலக பயணத்தில் ஒரு முக்கியமான படம் என்று சொன்னால் அது பாட்ஷா படம் என்று கூறலாம். இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் அவர்களே ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ,இதை அடுத்து சிவா இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும், இந்த படம் அவரது 168-வது படமும் என குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் எல்லாம் முடித்துவிட்டு இன்னும் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடிக்க திட்டமிட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது. ஆகமொத்தம் நம்ம சூப்பர்ஸ்டார் அவர்கள் கொஞ்சம் பிசியாக உள்ளார் தெரிய வருகிறது. இந்த நிலையில் அட்லியின் இந்த பாட்ஷா 2 படம் குறித்த அறிவிப்பை தெரிந்த ரஜினி ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள். மேலும், நம்ம தலைவர் பாட்ஷா 2 படத்துக்கு ஓகே சொல்வாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

-விளம்பரம்-
Advertisement