என்னது டான் பட இயக்குனர் இத்தனை விஜய் படங்களில் நடித்துள்ளாரா ? படத்தை பார்த்துவிட்டு அட்லீ போட்ட எமோஷனல் பதிவு.

0
478
cibi
- Advertisement -

டான் படம் குறித்து இயக்குனர் அட்லி பதிவிட்டிற்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் சமுத்திரக்கனிக்கு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

- Advertisement -

டான் படத்தின் கதை:

ஆனால், மகனாக சிவகார்த்திகேயன் பிறக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன் மீது சமுத்திரக்கனி அதிக ஈடுபாடு காட்டாமல் கண்டிப்புடன் வளர்க்கிறார். அது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் சாதிக்க மாட்டார் என்று சமுத்திரக்கனி நினைக்கிறார். தன் தந்தையின் எண்ணத்தை முறியடிக்க சிவகார்த்திகேயன் சாதித்துக் காட்ட முயற்சிக்கிறார். அப்போது கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ் ஜே சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

Image

டான் படம் பற்றிய தகவல்:

இறுதியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? தன் தந்தையின் எண்ணத்தை முறியடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் குறித்து பிரபலங்கள் பலரும் நல்ல நல்லவிமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் அட்லி அவர்கள் டான் படம் குறித்து டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

அட்லீ போட்ட டீவ்ட்:

டான் படம் ஏமோஷனல் ஃபேமிலி என்டர்டெய்னர். சிவகார்த்திகேயன் உடைய பர்பாமன்ஸ் சூப்பர். அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. மாஸ் டான். சிபி இயக்குனர் சார் நான் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அருமையான படம். உணர்வுபூர்வமாக கொண்டு சென்றிருக்கிறார்கள். கீப் ராக்கிங், லவ் யூ டா. ஒட்டு மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள் என்று அட்லீ பதிவிட்டிருக்கிறார். அதை பார்த்த சிபி சக்கரவர்த்தி அவர்கள் பதில் ட்வீட் போட்டு இருக்கிறார்.

சிபி சக்கரவர்த்தி பதில் டீவ்ட்:

அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய குரு அட்லீ சார். உங்களுடைய பாராட்டுக்கு ஒரு டன் நன்றி சார். என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. நன்றி சார் என்று கூறியிருக்கிறார். இவர்களின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த தெறி, மெர்சல் ஆகிய படங்களில் சிபி சக்கரவர்த்தி பணியாற்றியிருந்தார். மெர்சல் படத்தின் போது அட்லீயிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக சிபி பணியாற்றி இருந்தார். தற்போது இவர் டான் படத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

Advertisement