கொரியன் இயக்குனர் காலமானதற்கு இரங்கல் தெரிவித்த அட்லீ – கலாய்க்கும் நெட்டிசன்கள். காரணத்தை பாருங்க.

0
992
atlee
- Advertisement -

கொரியன் பட இயக்குனர் காலமானதற்கு இரங்கல் தெரிவித்த அட்லீயை ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ கடந்த 2013ம் ஆண்டு ஆர்யா,ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார். இந்த படம் அட்லீ தமிழ் சினிமா உலகில் முதலில் இயக்கிய படமாகும். பின் ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து அட்லீ தளபதி விஜய் அவர்களின் “தெறி” படத்தை இயக்கினார்.

-விளம்பரம்-

இயக்குனர் அட்லீ இந்த படத்தின் மூலமே ரசிகர்களிடையேயும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும்,அட்லீ விஜயை வைத்து ‘மெர்சல்’படம் இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் படமாக மாறியது.இதை தொடர்ந்து விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்து பிகில் படத்தை இயக்கி இருந்தார்.அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி துவங்கி இறுதியாக வெளியாக பிகில் படம் வரை அட்லீ இயக்கும் படங்களின் காட்சிகள் காபி தான் என்று பல ஆதாரங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ராஜா ராணி – மௌன ராகம், தெறி – சத்ரியன். மெர்சல் – அபூர்வ சகோதரர்கள் பிகில் – சக்தே இந்தியா என்று பல கிண்டல்கள் அட்லீ மீது முன்வைக்கப்பட்டு தான் வருகிறது.

- Advertisement -

அட்லீ படத்தில் இடம்பெற்ற எத்தனையோ காட்சிகள் வேறு ஒரு படத்தில் இருந்து சுட்டதுதான் என்று நெட்டிசன்கள் பல ஆதாரங்களை அவ்வப்போது வெளியிட்டு தான் வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் இன்சிபேரேஷன் என்று அசால்ட்டாக கூறிவிட்டு சென்று விடுகிறார். இப்படி ஒரு நிலையில் கொரியன் பட இயக்குனர் கிம் கி டுக் காலமானதற்கு இரங்கல் தெரிவித்த அட்லீயை ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். கிம் கி டுக் இயக்இயக்கிய பல்வேறு படங்கள்வெனிஸ், பெர்லின் என சர்வதேச திரைப்பட விழாக்களில் இவரின் படம் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. கிம் கி டுக், கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியையும் கவலையையும் கொள்ளச் செய்திருக்கிறது.

கொரியா நாட்டில் மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு சினிமா பிரபலங்கள் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இயக்குனர் அட்லீயும், கிம் கி டுக்கின் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில், உலக சினிமாவுக்கு பேரிழப்பு என்றும், எல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் சார் நீங்க என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த ட்விட்டர் வாசிகள் அவரு படத்தையும் விட்டு வைக்காமல் காப்பி அடிங்க என்று கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement