தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அட்லீ. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனே நகரில் தொடங்கப்பட்டது.
அட்லீ இயக்கும் படம்:
இந்த படம் ஒரு வங்கியை ஹீரோ கொள்ளையடிக்கும் கதை அம்சத்தை கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. அதோடு ‘லயன்’ என்ற தலைபில் திரைப்படம் உருவாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவி கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா. அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
பிரியா அட்லீ திரை பயணம்:
பின் இவர் சின்னத்திரையில் நடித்தாலும் சினிமாவில் அறிமுகமானது என்னவோ சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தில் தான். பின்னர் இவர் நான் மகான் அல்ல, சிங்கம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். பிறகு பிரியா அட்லீயை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். மேலும், ப்ரியா அட்லீ எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தன் கணவருடன் எடுக்கும் போட்டோ, வீடியோ என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார்.
அட்லீ-பிரியா சுற்றுலா:
சமீபத்தில் கூட பிரியா தன் கணவருடன் சேர்ந்து சுற்றுலா சென்று இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் பிரியா அட்லீ அவர்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்த நிலையில் பிரியா அட்லி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கை அறை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கும் தகவல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
பிரியா பதிவிட்ட புகைப்படம்:
அது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், படுக்கை அறையில் தனது காலடியில் அட்லீ படுத்து தூங்கும் புகைப்படத்தை பிரியா பகிர்ந்து அதில் கமெண்ட்ஸ் பதிவு செய்ய முடியாத வகையில் ஆப் செய்து வைத்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு பலரும் லைக்குகளை குவித்து வந்தாலும் புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ் பகுதியை ஆப் செய்து வைத்திருப்பதற்கு ஏன்? என்ன ஆச்சு? என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.