லைவ் சாட்டில் கக்கூஸ்லியா என்று கிண்டலடித்த சாக்ஷி – உடன் இருந்த ரேஷ்மா – கடுப்பாகி ரசிகர் கேட்ட கேள்வி. ரேஷ்மா விளக்கம்.

0
42804
kavinlos

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக சிறப்பாக முடிவடைந்தது. மேலும்,இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த இரண்டு சீசன்களை விட மாஸ் காட்டியது. அதோடு இந்த பிக் பாஸ் 3ல் நடந்த சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் பூகம்பமே கிளம்பியது. அதிலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது ‘கவின், லாஸ்லியா’ காதல் தான்.

வின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும்,ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே “கவிலியா” என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இவர்கள் சம்பந்தமான புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள். எப்போவுமே நிகழ்ச்சியில் இருக்கும் வரை தான் காதல்,சண்டைகள் பற்றி பேசுவார்கள். ஆனால்,இந்த சீசன் காதல் மட்டும் தான் நிகழ்ச்சி முடிந்தும் ட்ரெண்டிங்கில் போய் கொண்டு உள்ளது.

- Advertisement -

அதே போல கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சாக்ஷியுடன் தான் நெருங்கி பழகி வந்தார். அதன் பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட பிரச்சனை வந்தது. மேலும், சாக்ஷி, கவின் லாஸ்லியா மீது கடும் கோபத்திலும் இருந்தார். இந்த நிலையில் ரேஷ்மா, சாக்ஷியுடன் இணைந்து லைவ் சாட்டில் ஈடுபட்ட போது ரசிகர் ஒருவர் கக்கூஸ் லியா என்று கமன்ட் செய்ய அதற்கு சாக்க்ஷி ‘இது தான் இப்போ வைரலா போது’ என்று கமன்ட் அடித்தார். எப்போதோ வெளியான இந்த வீடீயோவை பிடித்துக்கொண்டு சமீபத்தில் ரேஷ்மாவிடம் இதுகுறித்து ரசிகர் ஒருவர் கமன்ட் செய்தார்.

அதில், உங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உங்களுக்கு கவின் பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஒரு முறை சாக்ஷியுடன் நீங்கள் லைவ் சாட்டில் வரும் போது கவிலியா பற்றி மோசமாக கமன்ட் செய்த போது நீங்கள் ஏன் சிரித்தீர்கள். அவர்கள் அப்படி என்ன உங்களுக்கு பண்ணாங்க. ஏன் நீங்கள் கவின் லாஸ்லியா இருவரையும் இன்ஸ்டாகிராமில் follow செய்யவில்லை என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தார்.

வீடியோ 4:30 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த ரேஷ்மா, சமூக வலைத்தளமும் நிஜ வாழ்க்கையும் வேறு, நாங்கள் அனைவரும் போனில் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். அதே போக நான் கவின் – லாஸ்லியாவை follow செய்கிறேனா என்பதே எனக்கு தெரியாது. காரணம் என்னுடைய சமூக வலைதள பக்கத்தை எல்லாம் என்னுடைய pro தான் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் ரேஷ்மா.

Advertisement