எப்படி இருக்கிறது ‘அவதார் 2’ – கூடவே படம் பார்த்தவர்களின் விமர்சனம்.

0
730
- Advertisement -

உலகம் முழுவதும் பிரம்மிக்க வைத்த படங்களில் ஒன்று அவதார். இந்த படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய அளவில் இந்த படம் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. 13 வருடங்களுக்குப் பின் வெளிவந்த இந்த படத்திற்கு அவதார் : தி வே ஆஃப் வாட்டர் என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

அவதாரின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. பண்டோரா எனும் கிரகத்தில் நாவி எனும் இனம் வாழ்ந்து வருகிறது. இந்த கிரகத்தில் கதாநாயகன் ஜேக் சுள்ளி தன்னுடைய அண்ணனுக்கு பதிலாக காலடி எடுத்து வைக்கிறார். நாவிகளை அவர்களுடைய இடத்தில் இருந்து விரட்ட நாவிகளாகவே உருமாறி அவர்களுடைய வாழ்வியலையும் கற்றுக்கொண்டு செல்கிறார் ஜேக். அப்போது கதாநாயகி நெய்டிரி மீது ஜேக்கு காதல் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தான் எதற்காக வந்தோம் என்று மறந்து நாவிகள் மீதும் பண்டோரா கிரகத்தின் மீதும் கதாநாயகன் ஜேக் பாசம் காட்டுகிறார்.

- Advertisement -

இதனை அறிந்து கொண்ட ராணுவம் பண்டோரா கிரகத்தின் மீது தாக்குதலை ஏற்படுத்துகிறார்கள். இதனால் பண்டோராவின் சில இடங்கள் அழிக்கப்படுகிறது. இதனை அடுத்து நாவிகளுடன் இணைந்து அவர்களுடைய நம்பிக்கையும் ஆதரவையும் பெற்று நாவிகளின் தலைவனாக கதாநாயகன் ஜேக் மாறுகிறார். பின் நாவி படைகளுடன் இணைந்து ராணுவ படைகளை எதிர்த்து போராடி அந்த போரில் வெற்றியும் அடைகிறார் ஜேக். வில்லன் Colonel Quaritchயை கதாநாயகி நெய்டிரி கொன்று விடுகிறார். மேலும், இந்த போரில் நாவிகள் வெற்றி பெற்ற பின் மனிதர்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

சில மனிதர்கள் மற்றும் பண்டோரா கிரகத்தில் நாவிகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இதில் Colonel Quaritchன்
மகனும் குழந்தையிலிருந்து பண்டோராவில் நாவிகளுடன் விசுவாசியாக வளர்கின்றார். இதனை அடுத்து தனது மனித உடலில் இருக்கும் ஜேக் நாவிகளின் கடவுள் ஈவா மூலம் முழுமையாக நாவி உடலுக்குள்ளே செல்கிறார். இதனுடன் முதல் பாகமே முடிவடைகிறது. இதனை அடுத்து இரண்டாம் பாகத்தில் நாவினத்தினுடைய தலைவனாகவும், நான்கு பிள்ளைகளின் அப்பாவாகவும், தனது மனைவி நெய்டிரியுடன் சேர்ந்து சந்தோஷமாக கதாநாயகன் ஜேக் வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சமயத்தில் மீண்டும் பண்டோராவில் மனிதர்களுடைய கால் தடம் படுகிறது. இந்த முறை பண்டோராவில் புதிய உலகத்தை உருவாக்க வேண்டும் என்று ராணுவம் மிகப்பெரிய படையுடன் புறப்பட்டு வருகிறது. இவர்களுக்கு Colonel Quaritch உதவுகிறார். முதல் பாகத்தில் மனிதனாக இறந்து போன Colonel Quaritch தன்னுடைய நினைவுகளை சீப் மூலம் ஸ்டோர் செய்து நாவி உடலில் புகுந்து மீண்டும் கதாநாயகன் ஜேக்கை பழிவாங்க வருகிறார். Colonel Quaritch தன்னுடைய வீரர்களுடன் பண்டோரா காட்டுக்குள் வரும்போது ஜேக்கினுடைய மகன் மற்றும் இரு மகளுடன், Colonel Quaritch மகன் மைல்ஸ் Colonel Quaritch வீரர்களிடம் சிக்கி கொள்கிறார்கள்.

ஆனால், கதாநாயகன் ஜேக் தனது மகன் மற்றும் இரு மகள்களை போராடி காப்பாற்றி விடுகிறார். ஆனால், மைல்ஸ் Colonel Quaritchயிடம் கைதியாக மாட்டிக் கொண்டார். இதனை அடுத்து பண்டோராவில் இருந்தால் தன்னுடைய மனைவி, மகன்கள், மகள்களை இழந்து விடுவோம் என்று ஜேக் தன்னுடைய அரச பட்டத்தை வேறொருவருக்கு கொடுத்துவிட்டு பண்டோராவிலிருந்து வெளியேறி கடல்வாசி நாவிகளிடம் தஞ்சம் கேட்டு செல்கிறார். கடல் நாவிகளின் அரசர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் சம்மதிக்கிறார். பின் கடல் சார்ந்த விஷயங்களை ஜேக், அவரது குடும்பம் மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் வில்லன் Colonel Quaritch, ஜேக் இருக்கும் இடத்தை தேடி அலைகிறார். அப்போது வில்லன் Colonel Quaritchயிடம் ஜேக் குடும்பத்தின் சிலர் சிக்கிக் கொள்கிறார்கள்.

வில்லனை எதிர்த்து போராடாமல் தஞ்சம் சென்ற ஜேக் இறுதியில் தைரியத்துடன் Colonel Quaritchயை எதிர்த்து போராடி தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினார்? இல்லையா? வில்லனை மீண்டும் அழித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. மீண்டும் தன்னுடைய இயக்கத்தினால் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். படத்தில் ஒவ்வொரு நாவிகளையும் அருமையாக வடிவமைத்து இருக்கிறார். குறிப்பாக, கடல் நாவிகளாக வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் பாராட்டுக்குரிய வகையில் இருக்கிறது. கதாநாயகன் கதாநாயகி இருவரும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் மாஸ்காட்டி இருக்கிறார்கள்.

3d கிராபிக்ஸ், எமோஷனல், கதைக்களம் என்று படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்து மிரட்டி இருக்கிறார் இயக்குனர். ஆனால், படத்தின் நீளம் கொஞ்சம் குறைத்து இருந்தால் நன்றாக இருக்கும். முதல் பாகத்தை எப்படி வியப்பில் ஆழ்த்தியதோ அதேபோல் இரண்டாம் பாகத்தையும் பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. சில இடங்களில் சலிப்பு தட்டினாலும் விஷுவல், வி எப் எக்ஸ் மற்றும் அனிமேஷன் குழுவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மேக்கப் கலைஞர், சவுண்ட் எபெக்ட், அனிமேஷன் போன்ற அனைத்திற்குமே ஒரு தனி அப்ளாஸ் கொடுக்க வேண்டும்.பின்னணி இசை படத்திற்கு முக்கிய பலமாக இருக்கிறது. ஆக மொத்தம், அவதார் மீண்டும் ரசிகர்களின் ஃபேவரட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

நிறை:

இயக்குனரின் இயக்கம், திரைக்கதை வேற லெவல்.

பின்னணி இசை பக்கபலம்.

வி எப் எக்ஸ், அனிமேஷன் சூப்பர்.

ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் பிரமாதம்.

நடிகர்களுடைய நடிப்பு அபாரம்

குறை:

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

சில இடங்களில் சலிப்பு தட்டி இருக்கிறது.

மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவுமே இல்லை.

மொத்தத்தில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் -ஏமாற்றம்

Advertisement