கனவுக்காக வயதுக்கு வருவதை மறைக்கும் சிறுமி – கவனம் ஈர்த்த அயலி வெப் சீரிஸ் – அழுத்தமான விமர்சனம் இதோ.

0
476
ayali
- Advertisement -

உலகத்தை கொரோன தாக்கியதில் இருந்து சமீப காலமாக அதிக ஓடிடி தொடர்கள் வந்த வன்னமாறு இருக்கிறது. அவற்றில் பல மாபெரும் வெற்றியும் பெற்றுருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில், குஷிமாவதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இணைய தொடர் தான் அயலி. இத்தொடரில் அபிநயஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்திலும், அருவி மதன், அன்மோல், லிங்கா, சிங்கம்புலி, காயத்ரி, தர மெலோடி, பிரகஹீஸ்வரன், TSR சரினிவாசமூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பெண்களுக்கு எதிரான அடிமைத்தனத்தை பற்றி பேசும் இந்தொடர் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கதைக்களம் :

இந்த கதையில் 90களில் நடக்குமாறு காட்டப்படுகிறது, பெண்கள் வயதிற்கு வந்தபின் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் சாமிக்குதாம் வந்துவிடும் என நம்பும் வீரப்பண்ணை ஊரில் எந்த பெண்ணாலும் 9ஆம் வகுப்பிற்கு மேலே படிக்க முடியவில்லை, அந்த சூழ்நிலையில் 8ஆம் வகுப்பு படித்து வருபவர் தான் அபிநயஸ்ரீ, இவருக்கு நன்றாக படித்து மருத்துவராகவேண்டும் என்று ஆசை இதனால் தான் வயதிற்கு வந்ததை தன்னுடைய அம்மாவை தவிர யாரிடமும் சொல்லவில்லை. இப்படி மிகக்கடுமையாக மூட நம்பிக்கைகளை நம்பும் ஊரில் அதுவும் 90ஸ் காலங்ககளில் அந்த பெண் டாக்டர் படித்தாரா? அவரது செயல்பாடுகள் கிராமத்தின் மூட நம்பிக்கையை மாற்றியதா என்பதுதான் மீதி கதை.

- Advertisement -

தற்போது உள்ள சூழ்நிலையிலேயே இவ்வள்வு கட்டுப்பாடுகளும் மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கும் நேரத்தில் 1990ஸ் காலங்களில் இந்த நிலையில் மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்பதை தத்ரூபமாக கதையாக்கி இருக்கிறார் இயக்குனர். இந்த தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரமான தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயஸ்ரீ மூட நம்பிக்கைகளை தாண்டி வெற்றி பெறுவது, சில இடங்களில் ரத்ததை “இங்க்” என்றால் நம்புகிறார்கள் முட்டாள்கள் என்ற வசனம் எல்லாம் பட்டாயா கிளப்புகிறது.

தமிழ் செல்வியின் அப்பாவாக நடித்திருக்கும் அருவி மதன் பாசக்கார தந்தையாகவும் அதே நேரத்தில் பழக்க வழக்கங்கள் மாறக்கூடாது என்ற பெண்களை ஒடுக்கும் முறை கொண்ட ஆணின் குணத்தை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போன்று தமிழ்செல்வியின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் அனுமோல் மிகவும் நேர்த்தியாக கணவனுக்கு நல்ல மனைவியாக இருந்தால் போது என்ற கருத்தில் நடித்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் லிங்கா மிகவும் கட்சிதமாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு உண்மைத்தன்மையை வெளிப்படுத்தினாலும் பாடல்கள் அந்த அளவிற்கு இல்லை, கதைக்கு தேவையான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ராவா.

-விளம்பரம்-

படத்தில் வரும் சிங்கம்புலி, வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டி.எஸ்.ஆர்.சீநிவாசமூர்த்தி மிகவும் நேர்த்தியாகவும் சிரிக்க வைக்கும் படியும் நடித்திருக்கின்றனர். வீரப்பண்ணை கிராமத்தில் வரும் மக்கள் அங்குள்ள மக்களாகவே வாழ்த்திருக்கின்றனர். கதை குறிப்பாக பெண் பருவமெய்தலை மையமாக கொண்டாலும் மூட நம்பிக்கைகளால் ஒரு சாதாரண விஷயத்தை பெரிய விஷயமாக்கி மக்களை முட்டாளாக்கி ஆதாயம் காணும் நபர்களுக்கு கன்னத்தில் அறையும் வகையில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கியிருக்கிறார். மேலும் இத்தொடர் சிரிக்க வைக்கும் படியும் அதே நேரத்தில் சிந்திக்கும் படியும் இயக்கியிருக்கிறார்.

குறை :

குறை என்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை இசையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நிறை :

பிரமாதமான தொடர்

அணைத்து கதாபாத்திரங்களும் தங்களுடைய வேலையை சரியாக செய்திருக்கின்றனர்.

மூட நம்பிக்கைகளை உடைக்கும் தொடராக இருக்கிறது.

கருத்தை அழுத்தமாக கூறும் இனைய தொடர்.

மொத்தத்தில் “அயலி” எல்லா வயது மக்களும் பார்க்க வேண்டிய அற்புதமான ஓடிடி தொடர்.

Advertisement