பல தடைகளுக்கு பின் வெளியான ‘அயோக்யா ‘ படத்தின் முழு விமர்சனம்.!

0
1311
- Advertisement -

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா பாலியல் வன்முறை தொடங்கி, சமீபத்தில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி சம்பவம் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதனை மையக் கருத்தாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் அயோக்கிய

-விளம்பரம்-

கதைக்களம் :

- Advertisement -

படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் முதல் பாதி முழுவதும் மிகவும் அயோக்கியனாக இருந்து வருகிறார் நடிகர் விஷால். படத்தில் நடிகர் விஷால் ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார். வழக்கமான தமிழ் சினிமாவில் வரும் போலீசாக இல்லாமல் காசு கொடுத்து காசுக்காக எதையும் செய்யும் போலீஸ் அதிகாரியாக இருந்து வருகிறார் விஷால்.

இந்த நிலையில் சென்னையில் சட்டவிரோதமாக பல குற்றங்களை செய்து வரும் பார்த்திபன் தனது தொழிலுக்கு பிரச்சனை ஏற்படாது இருக்க தனக்கு சாதகமான ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்க ஆசைப்படுகிறார். பின்னர் தனக்கு இருக்கும் பலத்தை வைத்து விஷாலை தான் இருக்கும் பகுதிக்கு பணி மாற்றம் செய்து விடுகிறார்.

-விளம்பரம்-
Related image

விஷாலும் பணத்தை வாங்கிக்கொண்டு பார்த்திபன் செய்யும் அனைத்து அட்ராசிட்டிகளையும் கண்டும் காணாமல் இருந்து விடுகிறார். இப்படியே போய்க்கொண்டிருக்க இடையில் விஷாலுக்கு நெருங்கியபெண் ஒருவரை பார்த்திபனின் 4 சகோதரர்களால் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்படுகிறார்.

அதுவரை தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்று இருந்து வரும் விஷால் அந்த கற்பழிப்பு சம்பவத்திற்கு பின்னர் திருந்திவிடுகிறார். இதனால் அந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த பார்த்திபனின் தம்பிகள் அனைவருக்கும் சட்டரீதியாக தண்டனை வாங்கித் தர முயற்சிக்கிறார் விஷால். ஆனால், வழக்கம்போல அது முடியாமல் போக பின்னர் எப்படி விஷால் பார்த்திபனையும் அவரது தம்பிகளையும் பழி வாங்குகிறார் என்பதுதான் மீதிக்கதை.

ப்ளஸ்:

படத்தின் மிகப்பெரிய பலம் பார்த்திபனின் வழக்கமான நக்கல்களும் மற்றும் வசனங்களும்தான். அடுத்த பலம் தனது சிறப்பான ஒளிப்பதிவால் மேலும் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர். மேலும், விஷாலின் நடிப்பு மிகவும் பாராட்ட கூடியதாக இருந்தது. படத்தில் சீட்டின் நுனிக்கு வரும் காட்சிகள் இடம் பெறவில்லை என்றாலும் ஒரு சில காட்சிகளில் நம்மால் படத்தில் உள்ளே செல்ல முடிகிறது.

Related image

மைனஸ் :

பெரிய குறை இல்லை என்றாலும் கிளைமாக்ஸில் பெரிய மாற்றத்தை செய்துள்ள இயக்குனர், இறுதியில் வரும் பாடலை தவிர்த்திருக்கலாம். அதே போல படத்தில் பின்னணி நன்றாக இருந்தாலும் பாடல்கள் உதட்டளவில் கூட நிற்கவில்லை.

இறுதி அலசல் :

இது போன்ற கதை தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்கமறு’ படத்தின் ஒன்லைன் தான் இந்த படமும். இருப்பினும் இந்த படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றதால் தமிழ் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் விஷால் இந்த கதைக்கு ஓகே சொல்லி இருப்பார் அது ஓரளவுக்கு பிடிக்கும் ஆகியுள்ளது. மொத்தத்தில் இந்த படம் ஒரு சராசரி கமர்சியல் மற்றும் கொஞ்சம் த்ரில்லர் கலந்த கதையாக அமைந்துள்ளது தைரியமாக ஒருமுறை சென்று பார்க்கக்கூடிய படம் தான் நமது இணையதளத்தின் மதிப்பு 6.5/10

Advertisement