முழுசாக மாடர்ன் அவதாரத்திற்கு மாறி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். ஸ்லீவ் லெஸ் ஆடைகளில் நடத்திய போட்டோ ஷூட்.

0
57710
Ayswarya-Rajesh

தமிழ் சினிமாவில் நடிக்க தெரிந்த நடிகர்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர் . இவர் 2011 ஆம் ஆண்டு திரையுலகில் வெளியான ‘அவர்களும் இவர்களும்’ படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி ராஜேஷ் பல துறைகளில் பங்காற்றியவர். இந்த படத்தின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். அதை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, முட்டை, வீட்டு பிள்ளை உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

அதோடு தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தை தான் தமிழில் கனா என்று ரீமேக் செய்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த “நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பையும், வசூலிலும் தெறிக்க விட்டது என்று கூட சொல்லலாம். இதனை தொடர்ந்து இயக்குனர் நிர்மல் குமார் படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் டக் ஜெகதீஷ் என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறை கர்ப்பமாக உள்ளாரா? டீவீட் போட்ட அபிஷேக். குழப்பத்தில் ரசிகர்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா தான் ஹீரோவாக நடிக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் ஐஸ்வர்யா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றார்கள். இப்படி தமிழ் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் அசத்தி வருகிறார் அம்மணி.

-விளம்பரம்-

சமூக வளைத்தளத்தில் தற்போது அதிக கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முழுசாக மாடர்ன் அவதாரத்திற்கு மாறி வருகிறார். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதவிடுவதும் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் விதவிதமான ஸ்லீவ் லெஸ் ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement