சர்ச்சையான சங்கி குறித்த பேச்சு, ரஜினியை ரவுண்டு கட்டிய மீடியாக்கள். மேடையில் வருத்தத்தை தெரிவித்த ரஜினி மகள்.

0
503
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கம் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி.

-விளம்பரம்-

விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி மகள் ஐஸ்வர்யா பேசிய சங்கி பற்றிய விஷயம் பெரும் சர்ச்சையானது.

- Advertisement -

சங்கி குறித்த கருத்து :

‘சங்கி என்ற வார்த்தை முதலில் எனக்கு தெரியாது, அதை பற்றி தெரிந்த பிறகு ரொம்ப வேதனை அளிக்கிறது. என் அப்பா சங்கி கிடையாது என்பதை ஒரு இயக்குநராக சொல்ல பெருமைப்படுகிறேன் மேலும் ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் ஏன் ’லால் சலாம்’ போன்ற படத்தில் நடிக்கணும். சங்கியாக இருந்தால் அவர் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படத்தை பண்ண முடியாது. ஒரு மனித நேயரால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும்.

ரஜினி விளக்கம் :

இந்த படத்தை அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள். நீங்க எந்த மதமாக இருந்தாலும் இந்த படம் உங்களை பெருமைப்படுத்த வேண்டும். ரஜினிகாந்த் சங்கி இல்லை’ என்று கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினியிடம் ‘லால் சலாம் படத்தின் ப்ரோமோஷன் காகத்தான் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று சொல்கிறார்களே என்று கேள்வி எழுப்பியதற்கு அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கேயும் சொல்லவில்லை அப்பா ஒரு ஆன்மீகவாதி அனைத்து மதங்களையும் விரும்பவார். அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பது தான் அவரின் பார்வை என்று பதில் அளித்தார்.

-விளம்பரம்-

ரஜினி மகள் வேதனை :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘இந்த படத்தோட இசை வெளியீட்டு விழா முடிஞ்சதுக்குப் பிறகு அப்பாகிட்ட விமான நிலையத்துல ஒரு கேள்வி கேட்டாங்க. அப்போ அப்பா அவரோட கருத்தை சொல்லிட்டாங்க.நான் அதிகமாக பேசமாட்டேன்னு அப்பா இசை வெளியீட்டு விழாவுல இருந்தாரு. ‘உங்க மகள் பேசிய விஷயங்கள் தந்திரமா’னு அப்பாகிட்ட ஏர்போர்ட்ல கேட்டாங்க.

அந்த கேள்வியை கேட்காம இருந்திருக்கலாம்

என் மூலமாக தந்திரம் பண்ணியோ, படத்துல அரசியல் பேசியோ ‘சூப்பர் ஸ்டார்’ திரைப்படம் ஓடணும்னு இல்ல. அரசியல் பேசாத திரைப்படம் ‘ஜெயிலர்’. அந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டாச்சு. நான், என் சகோதரினு மட்டுமில்லாம எல்லோரோட சொந்தக் கருத்தையும் மதிக்கக்கூடிய மனுஷன் அவர். அவர்கிட்ட அந்த கேள்வியை கேட்காம இருந்திருக்கலாம். என்கிட்டகூட அந்த கேள்வியைக் கேட்டிருக்கலாம்.” என கூறி சங்கி சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement