லால் சலாம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தனது முன்னாள் மனைவி குறித்து விஷ்ணு விஷால் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 3 , வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். இந்த படத்தில் ரஜினி முக்கிய ரோலில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகி இருவரும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசைமைத்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஷ்ணு விஷால் ‘ரஜினி சார் மிகச் சிறந்த மனிதர். நான் சொல்லப்போகும் இந்த விஷயத்தை பலரும் சொல்லாதீர்கள் என்று சொன்னார்கள்.ஏனென்றால் இது மிகவும் பர்சனல். ஆனால், நான் இதை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். இந்த படத்தில் நான் கமிட்டான பின்னர் என் மகனின் அம்மா எனக்கு போன் செய்தார்.
அப்போது அவர் என்னிடம் ‘நீ இந்த படத்தில் நடிக்கிறாயா? என்று கேட்டார் ஆமாம் உனக்கு எப்படி தெரியும்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் ‘ரஜினி சார் என்னை ரஜினி என் மகள் ஒரு படம் பண்ண போகிறார். அந்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க வைப்பதாக சொல்லி இருக்கிறார். நானும் அந்த படத்தில் நடிக்கிறேன். உனக்கு ஓகேவா என்று கேட்டார் என்று அவர் என்னிடம் சொன்னார்.
இதை நான் மறக்கவே மாட்டேன் ஒரு நண்பனின் மகளுக்கு ரஜினி சார் கொடுத்த இந்த முக்கியத்துவம் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்க காரணம். இதை சொல்லனுமா சொல்லி இருக்க கூடாதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னை பொருத்தவரை அவர் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பதற்கு காரணமே இந்த மனசு தான். அவர் அப்படி கேட்டார் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
எந்த அளவிற்கு தனது நண்பரை அவர் மதிக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். மேலும் என் மகனின் அம்மாவும் நல்லா பண்ணு இந்த படத்தில் என்று எனக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ரஜினி சார் அப்படி கேட்டதும் சார் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பரவால்ல சார் நடிக்கட்டும் என்று அவர் சொன்னதாக என்னிடம் கூறினார். விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.
சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.விஷ்ணு விஷால் முதல் மனைவி ரஜினி, பிரபல நடிகர் கே என் நட்ராஜின் மகள் தான், இவர் ரஜினியின் மிகவும் நெருங்கிய நண்பர், நடிகராக இருந்த இவர் ரஜினியின் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.