சாய் பல்லவிக்கு Bouncerஆக மாறிய ராணா – வீடியோவை கண்டு gentleman என்று புகழும் ரசிகர்கள்.

0
485
saipallavi
- Advertisement -

செல்பி எடுக்க சாய் பல்லவியை ரசிகர்கள் சூழ்ந்த போது பாதுகாவலனாக பாதுகாத்த ராணா குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. மலையாள நடிகையான சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். மேலும், இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தாலும் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவி தான் மிகவும் பிரபலமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க வந்தார். தமிழில் கஸ்தூரி மான் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார் சாய் பல்லவி. பின் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான ‘என் ஜி கே’ படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : என்னக்கூட தான் ஐஸ் வரியானு கேட்டான் – பயில்வான் ரங்கநாதன் குறித்த கேள்விக்கு ஐஸ்வர்யா கொடுத்த எதிர்பாராத பதில்.

- Advertisement -

ஷ்யாம் சிங்கா ராய் படம்:

சமீபத்தில் நானி நடிப்பில் இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. இதனை தொடர்ந்து பல படங்களில் சாய் பல்லவி கமிட்டாகி இருக்கிறார்.

சாய்பல்லவி நடிக்கும் படம்:

அந்த வகையில் தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் வெளியாகி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கு கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான புகைப்படம் எல்லாம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

சாய்பல்லவியை காத்த ராணா:

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சாய்பல்லவி இடம் செல்பி எடுக்க சூழ்ந்த ரசிகர்களிடமிருந்து ராணா பாதுகாத்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுமட்டும் இல்லாமல் ராணா அவர்கள் சில நிகழ்ச்சியில் மேடையில் சாய்பல்லவி பேசி கொண்டு இருக்கும் போது செல்பி எடுக்க ரசிகர்கள் நெருங்கும் போது பவுன்சராக ராணா நின்று பாதுகாத்து இருக்கிறார். இதுகுறித்து சாய்பல்லவி பேட்டியில் கூறியிருந்தது, ராணா மிகவும் நல்ல நண்பர்.

ராணா குறித்து சாய் பல்லவி கூறியது:

நிகழ்ச்சியில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருந்த போது அவர் ரசிகர்களிடம் பாதுகாத்து பத்திரமாக என்னை அனுப்பி வைத்திருந்தார். நான் மட்டுமில்லை படப்பிடிப்பு தளத்திலும் நிகழ்ச்சியிலும் நடிகைகளுக்கு பாதுகாப்பாக இருந்து அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறார் ராணா. அவர் நடிகர் என்ற திமிர்த்தனம் இல்லாமல் ஒரு நல்ல பாதுகாவலராக இருக்கிறார். உண்மையாலுமே ராணா ஒரு நல்ல மனிதர் என்று கூறியிருந்தார்.

Advertisement