விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் எங்கு தேடியும் சேரன் கிடைக்கவில்லை என்று அவருடைய தம்பிகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். நடேசன் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தார். ஆனால், சேரன் இல்லை. சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். அதற்குப்பின் சோழன்- நிலா இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சேரன் காணவில்லை என்று புகார் கொடுத்தார்கள். அதற்குப் பின் சோழன் தன் அண்ணனை நினைத்து ரொம்பவே எமோஷனலாக கதறி அழுதார்.

நிலா, அவருக்கு ஆறுதல் சொல்லி பார்த்தார். இருந்தாலுமே சோழன் கேட்கவில்லை. எல்லா இடமும் தேடி அலைந்து சேரன் கிடைக்காததால் வேதனையில் வீட்டில் உள்ள எல்லோருமே அழுது கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து நடேசனின் தங்கையும் அவருடைய கணவரும் ஆறுதல் சொல்வதற்காக வீட்டிற்கு வந்தார்கள். அப்போது வந்த நடேசன், தன்னுடைய தங்கை, கணவர் எல்லோரையும் திட்டி விட்டு வெளியே அனுப்பினார். ஆனால், அவர்கள் கோபப்படாமல் சேரன் வீட்டில் ஆறுதல் சொல்லிவிட்டு போனார்கள்.
அய்யனார் துணை:
அதற்குப்பின் நடேசன், இந்திக்காரப் பெண் வீட்டில் சேரன் இருக்கிறாரா? தேடிப்பார் என்றார். உடனே சேரன் சந்தேகப்பட்டு சந்தாவின் அண்ணாவை பார்த்தார். சந்தாவின் அண்ணாவால் எதுவும்
மறைக்க முடியவில்லை. பின் வேறு வழியில்லாமல் சேரன் தன் வீட்டில் இருக்கும் உண்மையை சொல்லிவிட்டார். அதற்குப்பின் சேரனை பார்க்க சோழன் சென்று விட்டார். அப்போது கோபத்தில் சோழன், வீட்டில் எல்லோருமே அழுது கொண்டிருப்பதை சொன்னார். பின் சேரன், சோழனை கட்டிப்பிடித்து அழுதார்.

சீரியல் ட்ராக்:
சேரனை சமாதானம் செய்து சோழன் வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் எல்லோருமே சேரனை பார்த்து எமோஷனலாக பேசினார்கள். அதற்கு பின் நடேசன், சேரனை கன்னத்தில் அறைந்து என்னுடைய இரண்டு மனைவியும் நான் தான் கொன்று விட்டேன் என்று இந்த ஊர் உலகம் பேசியது. உண்மை எதுவென்று எனக்கு தான் தெரியும். ஜோசியர் சொன்னார் என்று வீட்டை விட்டு போவதா? என்று திட்டினார். அதற்குப்பின் வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக பேசி சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=VQYKlFV8gAU
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேரன் ஜாதகத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். உடனே சோழன், நான் அந்த ஜோதிடர் சொல்றது பொய்ன்னு நிரூபிக்கிறேன் என்று நாலு ஜோசியரை வரவைத்து சேரன் ஜாதகத்தை பார்க்க சொல்லுகிறார்கள். ஒவ்வொருவருமே ஒவ்வொரு மாதிரியாக சொல்கிறார்கள். அதுவும் சேரன் ஜாதகத்தை புகழ்ந்து பேசுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நான்கு ஜோசியர்கள், குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு நிலா, கோவிலுக்கு போகலாம் என்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சம்மதிக்கிறார்கள்.






