விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் கோபத்தில் சோழன் குடிக்கப் போனார். அந்த இடத்திற்கு சோழனின் ஓனருமே குடித்துக்கொண்டிருந்தார். அப்போது சோழன், தன்னுடைய திருமணத்தை பற்றியும் நிலா தன்னிடம் நடந்து கொள்ளும் விதத்தை பற்றியும் சொல்லி புலம்பினார். உடனே அந்த ஓனர், நீ அவள் உன் புருஷன் தானே. நீ உரிமையாக பழகு. அப்போதுதான் அவள் உன்னிடம் நெருங்கி பழகப் பார்ப்பாள். நீ விலகி போனால் அவளும் விலகி போவாள் என்றெல்லாம் தேவையில்லாத ஐடியா கொடுத்தார்.

நிறைய குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சோழன் நேராக நிலா ரூமிற்கு சென்று அவருடைய பக்கத்திலேயே படுத்தார். இதை பார்த்த நிலா ரொம்பவே பயந்து போய் வெளியே போக பார்த்தார். உடனே சோழன், நான் உன்னுடைய புருஷன். உன்னுடைய ரூமில் தான் தூங்குவேன் என்று சொன்னார். நிலா எவ்வளவு சொல்லியுமே சோழன் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் சோழன் கதவை தாழ்ப்பாள் போட்டான். இதனால் நிலா பயத்தில் சேரன் அண்ணா என்று கத்தினார். இதையெல்லாம் கேட்டு சேரன், பாண்டியன், பல்லவன் மூவருமே கதவை தட்டினார்கள். ஆனால், சோழன் கதவை திறக்கவில்லை.
அய்யனார் துணை:
பின் நிலா, சோழனை தள்ளிவிட்டு கதவை திறந்து விட்டார். நிலா பயந்து போய் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து விட்டார். சோழன் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் கோபத்தில் சேரன், சோழனை அடித்து விட்டார். பாண்டியன் சோழனை அழைத்துக் கொண்டு வெளியே போய் தூங்க வைத்தார். மறுநாள் காலையில் நிலா எதுவும் பேசாமல் அமைதியாக வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். போதை தெளிந்து சோழன் நடந்ததை நினைத்து பார்த்தார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமே சோழன் பேசினார். ஆனால், யாருமே முகம் கொடுத்து கூட சோழனிடம் பேசவில்லை.

நேற்று எபிசோட்:
நிலா, சோழன் நடந்ததை நினைத்து பார்த்தே ரொம்ப வருத்தமாக இருந்தார். அப்போது தன்னுடைய ஆபீஸில் வேலை செய்யும் தோழியிடம் ஹாஸ்டல் பத்தி கேட்டார். அவருமே தான் தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு ஹாஸ்டல் வார்டனிடம் பேசி தங்குவதற்கு நிலா ஏற்பாடு செய்தார். முதலில் சேரன் வேண்டாம் என்று சொன்னாலும் நிலாவிற்காக ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, துணிகளை எல்லாம் பேக் செய்து கொண்டு தயாராகி கிளம்பினார். இதை அறிந்தவுடன் சோழன் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டார். கோபத்தில் நிலா, நான் எதுவும் பேச விரும்பவில்லை. நான் இங்கிருந்து கிளம்புகிறேன் என்று சொன்னார்.

சீரியல் ட்ராக்:
நேற்று எபிசோட்டில் நடேசன், நிலா வீட்டில் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டார். நிலா, சோழன் வீட்டில் இருந்ததை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருந்தார். மறுநாள் காலையில் நிலாவை பார்ப்பதற்காக நடேசன் ஆஸ்டலுக்கே வந்திருந்தார். அப்போது நடேசன், சோழன் செய்ததற்கெல்லாம் காரணம் நான் தான் என்று எல்லாம் உண்மையை சொன்னார். இதனால் கோபப்பட்டு நிலா, நடேசன் திட்டி அனுப்பி விட்டார்.
அதற்குப்பின் வீட்டில் சோழனிடம் யாருமே முகம் கொடுத்து கூட பேசவில்லை. இதனால் சோழன் ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி இருந்தார். நிலாவிடம் சோழன் மன்னிப்பு கேட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன் பலூன் அனுப்பி நிலாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இதனால் கோபப்பட்ட நிலா, சோழனை திட்டி அங்கிருந்து அனுப்புகிறார். இருந்தாலுமே விடாமல் சோழன் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் நிலா வீட்டில் இல்லாததால் சோழன் குடும்பத்தை பற்றி அக்கம் பக்கத்தினர் மோசமாக பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன், தன்னிடம் நன்றாக பேசாமல் கடைக்கு வருபவர்களிடம் நன்றாக சிரித்து பேசுவதால் கோபப்பட்டு வானதி சண்டை போடுகிறார். இதனால் கோபத்தில் பாண்டியன் வானதியைத் திட்டி அனுப்பி விடுகிறார். நிலா வீட்டில் இல்லாததால் வருத்தத்தில் பல்லவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இத்துடன் சீரியல் முடிகிறது






