விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன்- பாண்டியன் இருவருமே ஜெயந்தி வீட்டை சுற்றி எல்லா இடங்களிலும் விசாரித்தார்கள். எல்லோருமே ஜெயந்தி குடும்பத்தை பற்றி மோசமாகத்தான் சொன்னார்கள். இதனால் சோழன், பாண்டியனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இன்னொரு பக்கம் கார்த்திகா, தன்னுடைய அம்மா- மாமாவை அழைத்துக் கொண்டு சேரன் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் நிச்சயதார்த்தத்திற்கு வர சம்மதம் சொன்னார்கள்.
அதோடு நிச்சயதார்த்தத்துக்கு என்னென்ன தேவை, எப்போது போகணும் என்ற விவரங்களை எல்லாம் கார்த்திகாவின் அம்மா சொன்னார்.

இதையெல்லாம் நிலா கவனித்துக் கொள்கிறார். அதற்குப்பின் நிச்சயதார்த்தத்திற்காக சேரன் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது சோழன்- பாண்டியன் இருவருமே தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார்கள். அப்போது சேரன் இல்லாத நேரம் பார்த்து சோழன், ஜெயந்தி குடும்பத்தை பற்றி தவறாக தான் பேசினார்கள். இந்த கல்யாணம் அண்ணனுக்கு சரியா வருமா? என்று தெரியவில்லை என்றார். இதைக் கேட்டு நிலாவிற்கு குழப்பமாக இருந்தது.
அய்யனார் துணை:
நிலா, நிச்சயதார்த்தம் தான் நடக்கப்போகிறது. எதுவாக இருந்தாலும் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் தயாராகுங்கள் என்றார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே நிச்சயதார்த்தத்திற்கு தயாராகி இருந்தார்கள். அப்போது சேரனுடைய பெரியப்பா, அத்தை, கார்த்திகா எல்லோருமே வந்தார்கள். பின் எல்லாருமே சேர்ந்து ஜெயந்தி வீட்டிற்கு போனார்கள். அங்கு மாப்பிள்ளை வீட்டில் வரவேற்பதற்கு கூட யாருமே வெளியில் இல்லை. நிச்சயதார்த்தத்திற்கான அறிகுறியும் இல்லை. யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. பின் ஜெயந்தியின் அப்பா, சேரன் குடும்பத்தை வியப்பாக பார்க்கிறார். பின் அவர்களை எல்லாம் உள்ளே அழைத்து உட்கார வைத்தார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது நடேசன், மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரு மரியாதையே இல்லையா? வாசலில் நின்று வரவேற்க வேண்டாமா? என்றெல்லாம் கேட்டார். அப்போது ஜெயந்தியின் அப்பா, நாங்கள் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். தரகர் உங்களிடம் சொல்லவில்லையா? என்றார். இதை கேட்டு சேரன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். நடேசன், இது தரகரிடம் சொல்ல வேண்டிய விஷயமா? என்றார். அப்போது ஜெயந்தி அம்மா, மாப்பிள்ளை மன்னிப்பு கேட்டு ஜெயந்தியுடன் சேர்ந்து வாழ ஒத்துக் கொண்டார். அதனால் தான் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம் என்றார். இதை கேட்டு சேரன் உடைந்து விட்டார்.
https://www.youtube.com/watch?v=fe2KGGhElW8
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், நிச்சயதார்த்தம் நின்றதை நினைத்து சேரன் என்று ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அனீஸ், நீங்கள் தப்பா நினைக்கவில்லை என்றால் ஒன்று சொல்லுவேன். என்னுடைய தங்கையை கல்யாணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்கிறார். இதை கேட்டு சந்தா வெட்கப்பட்டு உள்ளே சென்று விடுகிறார். சேரனும் சந்தாவை பார்த்து சிரிக்கிறார்.






