விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி அம்மா, சந்தாவை பார்த்து யாரு இந்த பெண்? எதற்காக இங்கே வந்திருக்கிறாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். வானதி ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார். வானதியின் பெற்றோர்கள், சந்தா இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்கள். பின் இதை பற்றி வானதி, பாண்டியன் இடம் சொன்னார். சேரன் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் கல்லூரியில் பல்லவன், தன்னுடைய அண்ணனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார்.

சேரன், சந்தாவை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். பாண்டியன் ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் சோழன், பாண்டியனுக்கு போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது சந்தாவிற்கு நடந்ததை எல்லாம் பாண்டியன் சொன்னார். அதைக் கேட்டுச் சோழன் ஷாக் ஆனார். பின் இதைப் பற்றி சோழன், நிலாவிடம் சொன்னார். உடனே நிலா, சேரனுக்கு போன் செய்து விசாரித்தார். சேரணுமே நிலாவிடம் நடந்ததை சொல்லி வானதி வீட்டில் சந்தா இருக்கும் விஷயத்தை பற்றி சொன்னார்.
அய்யனார் துணை:
நிலா, வானதி செய்த காரியத்தை ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். நிலா- சோழன் இருவருமே ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே சோழன், நீங்கள் என் அருகில் இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னவுடன் நிலா அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் வானதி, சந்தாவிற்கு தேவையான எல்லா உதவியும் செய்து தந்தார். அப்போது பாண்டியன், வானதிக்கு போன் செய்து விசாரித்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா-சோழன் இருவருமே ட்ரிப்பை முடித்துவிட்டு கிளம்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது வயதான தம்பதியுமே பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். நிலாவும் எதற்கும் மறுப்பு சொல்லாமல் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்கிறார். அதை பார்த்து சோழன் ரொம்ப சந்தோசப்படுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதிக்கு போன் செய்து சந்தாவை வீட்டிற்கு அழைத்து வர சொல்கிறார். பின் வானதி இதைப்பற்றி சந்தாவிடம் செல்கிறார்.

சீரியல் டிராக்:
அதற்குப்பின் பல்லவன், கல்லூரியில் எப்படியாவது போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய நண்பர்கள் வேண்டாம் என்று சொல்லியுமே பல்லவன் கேட்கவில்லை. அதற்குப்பின் சந்தாவை அழைத்துக் கொண்டு வானதி, சேரன் வீட்டிற்கு வருகிறார். சந்தாவை பார்த்தவுடன் சேரன் ரொம்ப சந்தோஷப்படுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தாவிடம் விசாரிக்கிறார்கள். பின் வானதி செய்த விஷயத்தை பாராட்டுகிறார்கள். அதற்கு பின்பு சேரன்-சந்தா இருவரும் தனியாக சந்தித்து பேசி கொள்கிறார்கள்.






