விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, சோழனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட சோழன், தான் திருடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் வானதி ஷாக் ஆனார். அதற்குப்பின் பாண்டியன், வானதியை தனியாக அழைத்துச் சென்று நடந்ததை எல்லாம் சொன்னார். வானதி, சோழனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சோழன் ட்ரிப் போகும் விஷயத்தை சொன்னார். நிலா நானும் அந்த ட்ரிப்புக்கு வருகிறேன் என்றார்.

சோழன், நிலா இருவரும் அந்த வயதான ஜோடியை ட்ரிப்புக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். செல்லும் வழியில் அந்த வயதான ஜோடி நிலாவிடம் கல்யாணமானதை பற்றி எல்லாம் கேட்டார்கள். சோழன், வழக்கம் போல தங்களுடைய காதல் கதையை கொஞ்சம் சுவாரசியமாகவும் உண்மையில் நடந்தது போலவே சொன்னார். அதை அவர்களும் நம்புகிறார்கள். நிலா முறைக்கிறார். இன்னொரு பக்கம் பல்லவன், காயத்ரி இருவரும் சந்தித்து தங்கள் செய்த தவறை உணர்ந்து பேசி இருந்தார்கள்.
அய்யனார் துணை:
பல்லவன் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இன்னொரு பக்கம் சேரன், சந்தாவை பார்க்க போனார். அப்போது சந்தாவிடம், அவர் பெற்றோர் திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் விஷயத்தை சொல்லி அழுதார். சேரனும் சந்தாவிற்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் நிலா, சோழன் வயதான தம்பதி எல்லோரும் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக் கொண்டார்கள். அப்போது சோழன்,
டிரைவராக போகும்போது தான் படுக்க இடம் இல்லாமல் படும் கஷ்டத்தை எல்லாம் சொன்னார். இதைக் கேட்டு நிலா ரொம்பவே வருத்தப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, தன்னுடைய ஆசை கனவுகளை பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். சோழன், எனக்கெல்லாம் அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு தூங்க செல்கிறார். இன்னொரு பக்கம் சேரனுக்கு போன் செய்த அனிஷ், சந்தாவை அழைத்துக் கொண்டு போக என்னுடைய வீட்டில் இருந்து வருகிறார்கள். சந்தாவை முறை மாமனுக்கு கட்டி வைக்கப் போவதாக சொல்கிறார்கள். சந்தா ரொம்பவே பயந்து போயிருக்கிறார். ஏதாவது செய்யுங்கள் அண்ணா என்று சொல்கிறார். சேரன், சீக்கிரமா வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் சேரன், பாண்டியன் இருவருமே சந்தா வீட்டுக்கு போகிறார்கள். இன்னொரு பக்கம் சோழன்- நிலா இருவரும் வெளியில் கிளம்புவதற்கு தயாராக இருக்கிறார்கள். அப்போது நிலா, உங்களுக்கென்று ஆசை கனவு லட்சியம் எதுவும் இல்லையா? இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று சொல்கிறார். சோழனும் நிலா சொன்னதை திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் சேரனை பார்த்தவுடன் சந்தா எமோஷனலாக அழுகிறார். அனீஸ், என்னுடைய வீட்டில் இருந்து சென்னை வந்து விட்டார்கள். எப்போது வேண்டுமானாலும் இங்கு வருவார்கள். என்ன செய்வதென்றே புரியவில்லை என்று சொல்கிறார். சேரனும் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்.






