விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன் குடும்பம் சந்தோஷமாக வீட்டிற்குள் சென்றார்கள். இனிமேல் வீட்டில் எல்லா வேலையும் செய்யலாம் என்று நடேசன் குடும்பத்தில் பேசிக்கொண்டார்கள். எல்லோரும் ரொம்ப சந்தோசமாக பேசி கொண்டு இருந்தார்கள். இதை ஒளிந்து நின்று தன் அண்ணன் பார்ப்பதை நடேசன் பார்த்து விட்டு அவரை வேண்டும் என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். நடேசன் அண்ணனை நடுவில் நிற்க வைத்து எல்லோரும் டான்ஸ் ஆடினார்கள்.

அய்யனார் வீட்டில் எல்லோருமே பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு தயாரானார்கள். சோழன்- நிலா இருவரும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தார்கள். அப்போது நிலா, தன் வீட்டில் பொங்கல் பண்டிகையை எப்படி எல்லாம் கொண்டாடுவார்கள் என்று சொல்லி ஃபீல் பண்ணினார். சோழனும் அவருக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் வானதி, பாண்டியன் இருவரும் பொங்கல் பண்டிகை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அய்யனார் துணை:
அப்போது வானதி வேண்டும் என்று வம்பு இழுத்து பாண்டியனிடம் சண்டை போட்டார். பின் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதை வானதியின் மாமா பார்த்து விட்டார். இதைப்பற்றி வானதியின் மாமா வீட்டில் சொல்லி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்றார். உடனே வானதியின் அப்பா- அம்மா இருவருமே சம்மதித்தார்கள். ஆனால், வானதியின் அண்ணன் தான் பிரச்சனை செய்தார். இருந்தாலும் வானதியின் அப்பா அம்மா இருவரும் தன் மகனை திட்டி விட்டு பாண்டியனுக்கே வானதியை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து விட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பொங்கல் பண்டிகை என்பதால் நிலா, வீட்டில் உள்ள எல்லோரையும் கோலம் போட அழைக்கிறார். பின் வரைந்த கோலத்தின் மீது நிலா கலர் கொடுக்க சொல்கிறார். எல்லோரும் நிலா சொல்வதை போல் செய்கிறார்கள். கோலமும் அழகாக வந்து விடுகிறது. மொத்த குடும்பமும் கோலத்தின் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். மறுநாள் காலையில் பொங்கல் பண்டிகை என்பதால் நிலா எல்லோரையும் எழுப்பி ரெடியாக சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
வீட்டில் உள்ள எல்லோருமே மும்முரமாக தயாராகிறார்கள். இன்னொரு பக்கம் வானதி, பாண்டியன் வீட்டிற்கு வருவதற்காக தயாராகி நிற்கிறார். பின் வானதி, பாண்டியன் வீட்டுக்கு பொங்கல் வைக்க போவதாக சொல்கிறார். உடனே வானதியின் அம்மா, நம் வீட்டில் பொங்கல் வைக்கணும் என்கிறார். வானதி முடியாது என்கிறார். வானதி அப்பா, எங்களுக்கு பாண்டியனை உனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம். அவர்கள் வீட்டில் வந்து பெண் கேட்க சொல் என்று சொல்கிறார். இதைக் கேட்டு வானதிக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.






