விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், அந்த பெண்ணினுடைய பெயரை கண்டுபிடித்துவிட்டேன். காயத்ரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்ட நிலா, கடுப்பாகி அந்த இடத்தை விட்டு சென்றார். இன்னொரு பக்கம் பெண் வீட்டில் திருமணத்தை பற்றி பேசுவதாக தரகர் சொல்வதால் சேரனுக்கு என்ன செய்வது புரியவில்லை. குழப்பத்திலேயே இருந்தார். வீட்டில் உள்ளவர்களிடமும் சரியாக பேசவும் இல்லை. அதற்குப்பின் சோழன், காயத்ரியை சந்தித்து பேச டிப் டாப்பாக ரெடியாகி கிளம்பினார். இதையெல்லாம் பார்த்த நிலாவிற்கு கோபம் அதிகமாகி சோழனின் தலையைப் பிடித்து சுவற்றில் அடித்தார்.

சோழனை அடித்தது போல நிலா கனவு தான் காண்கிறார். பின் சோழன், காயத்ரியை பார்க்க போவதாக வீட்டில் எல்லோரிடமும் சொன்னார். அதற்குப்பின் பஸ் ஸ்டாண்டில் சோழன், காயத்ரியிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்து நிலாவிற்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால், எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து ஆட்டோவில் சென்று விடுகிறார் நிலா. இதை பார்த்து சோழன் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் நிலா வேலை செய்யும் இடத்திற்கு வந்த சேரன், தரகர் சொன்ன பெண்ணை பார்த்து பேசி விட்டு வந்தேன்.
அய்யனார் துணை:
அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். வீட்டில் நீதான் தம்பிகளிடம் சொல்ல வேண்டும் என்றார். முதலில் நிலாவிற்கு ஷாக் ஆக இருந்தாலும் சேரன் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதற்கு சந்தோஷப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த நிலா, சோழனை வீடு முழுக்க சுத்தம் செய்ய சொன்னார். பின் பல்லவன்- பாண்டியன் எல்லோரையும் வரவைத்து சேரன் திருமணம் பற்றி சொன்ன விஷயத்தை சொன்னார். இதை கேட்டு தம்பிகள் மூவருக்குமே ஷாக்காக தான் இருந்தது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன் யாருக்குமே தெரியாமல் பெண் பார்த்த விஷயத்தால் வீட்டில் உள்ள எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். பின் நிலா, பெண் வீட்டில் வருவதால் வீட்டையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று ஆளுக்கு ஒரு வேலையாக செய்யுங்கள் என்கிறார். அந்த சமயம் பார்த்து காயத்ரி போன் செய்ததால் சோழன், நிலாவை வெறுப்பேற்றுவதற்காகவே வேலை செய்யாமல் காயத்ரியிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் பார்த்து நிலாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. அதற்குப்பின் பெண் வீட்டில் வந்து விடுகிறார்கள். அப்போது எல்லோருமே கல்யாணப் பெண் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது ஜெயந்தி, நான் தான் கல்யாணப்பெண். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. இதையெல்லாம் நான் சேரனிடம் சொல்லிவிட்டேன் என்கிறார். இதை கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகிறது. அதோடு மாப்பிள்ளையை விட பெண்ணுக்கு மூணு வயது அதிகம் என்று சொன்னவுடன் நடேசனுக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. பின் பெண் வீட்டில் சீக்கிரமாகவே நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று சொன்னவுடன் சேரன் ஒத்துக் கொள்கிறார். ஆனால், இதில் யாருக்குமே விருப்பமில்லை. பெண் வீட்டார் சென்றவுடன் எதற்காக இந்த அவசர கல்யாணம்? ஏன் இப்படி? என்றெல்லாம் மாற்றி மாற்றி கேள்வி கேட்டார்கள். சேரன் எதுவும் சொல்லாமல் திணறுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






