விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ஒரு கட்டத்தில் கொந்தளித்த நடேசன், பல்லவனுக்கு வார்னிங் கொடுத்து திட்டி விட்டு சென்றார். நிலா, நீ உன்னை பற்றி மட்டும் யோசிக்காதே. அந்த பெண்ணின் நிலைமையை யோசித்துப் பார் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். கடைசியில் பாண்டியன், இதற்கெல்லாம் காரணம் நீ காயத்ரியை காதலித்ததால் தான் இவன் இந்த பிரச்சனையில் சிக்கினான் என்று சொன்னார். இதனால் சோழன் கோபப்படுகிறார்.

பல்லவன், தான் செய்த தவறை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். வீட்டில் உள்ள யாருமே பல்லவன் இடம் பேசவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் பல்லவன் தவித்து நிற்கிறார். அதற்குப்பின் சேரன், நிலாவிடம் வேலையைப் பற்றி கேட்டார். அப்போது சோழன், நிலாவின் தோழி புது கம்பெனி ஸ்டார்ட் செய்வதை பற்றி சொன்னார். உடனே பாண்டியன், இந்த வீட்டு பாத்திரத்தை வைத்து பணம் ஏற்பாடு செய்யலாம் என்றார். நடேசன், உன்னால் தான் இந்த வீடு வீடாகவே இருக்கிறது. சீக்கிரமாக அந்த பணத்தை ஏற்பாடு செய்து தொழிலை தொடங்கு என்றார்.
அய்யனார் துணை:
அந்த சமயம் பார்த்து வானதி, என்ன தொழில்? என்ன பத்திரத்தை அடமானம் வைக்கணும்? என்று கேட்டார். உடனே சோழன், நடந்தது எல்லாம் சொன்னார். இதனால் வானதிக்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் நிலாவிடம் அந்த வேலையைப் பற்றி வானதி விசாரித்தார். வானதி, இந்த வீட்டில் எல்லோருக்கும் உங்களை பிடிக்கிறது. என்னை அப்படி நடத்துவார்களா? என்று தெரியவில்லை. எல்லோரும் என் மீது கோபம்தான் படுகிறார்கள் என்றார். நிலா, அப்படியெல்லாம் கிடையாது என்றார். இதை எல்லாம் பார்த்த பாண்டியன், பிரச்சனை வந்துவிடுமோ என்று பயப்பட்டார். நிலா சென்றவுடன் வானதி, எதற்காக வீட்டு பத்திரத்தை வைக்கணும். உன்னுடைய தொழிலுக்கு யாராவது இப்படி செய்தார்களா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி, பாண்டியன் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை சோழன் பார்க்கிறார். பின் சோழன், பாண்டியனை அங்கிருந்து அழைத்து வருகிறார். அதற்குப்பின்
வானதி கிளம்பி விடுகிறார். அதற்கு பின் கடையில் பாண்டியன் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த சோழன் விசாரிக்கிறார். அப்போது பாண்டியன், எதற்கு எடுத்தாலும் சண்டை வருகிறது. அவள் இருந்தாலும் கஷ்டம், இல்லை என்றாலும் கஷ்டம் என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து வானதி வருகிறார். அப்போது சோழன், நான் வானதியிடம் பேசிக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே என்று சொல்லிவிட்டு வானதியை அழைத்துக்கொண்டு செல்கிறார். அப்போது வானதி, நான் ஸ்டாப்பாக பேசி கொண்டே வருகிறார். சோழனால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் சோழன் டென்ஷன் ஆகிறார். இன்னொரு பக்கம் பல்லவன் ரொம்பவே வருத்தமாக இருக்கிறார். அப்போது நிலா, அவருக்கு தைரியப்படுத்தி ஆறுதல் சொல்கிறார். அதோடு காயத்ரியின் நிலைமையை பற்றியும் விசாரிக்கிறார். அப்போது பல்லவன், நான் காயத்ரியை காதலிக்கிறேன் என்று உண்மையை சொல்கிறார்.






