விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் காலில் விழுந்து தன் ஓனரிடம் மன்னிப்பு கேட்டார். ஓனர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின் ஓனர், போலீஸிடம் ஃபோன் செய்து சோழன் மீது புகார் கொடுத்து விட்டார். சோழன் போலீஸிடம் கெஞ்சினார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. போலீஸ் சோழனை கைது செய்தார்கள். இன்னொரு பக்கம் நிலா- சேரன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து சேரனுக்கு போன் செய்த ஓனர், சோழன் செய்த வேலை எல்லாம் சொன்னார். அவமானத்தில் நிலா நிற்கிறார். சேரன் ஷாக் ஆனார்.

நிலா, தன் கம்பெனியில் கொடுத்த பணத்தை மீண்டும் வாங்கி சோழன் ஓனரிடம் கொடுத்தார். பின் சேரன், ஓனரிடம் கை கால்களில் விழுந்து சோழன் மீது போட்ட கேசை வாபஸ் வாங்க சொன்றார். பின் ஓனர், நிலா, சேரன் மூவருமே போலீஸ் ஸ்டேஷன் போனார்கள். அங்கு ஓனர், சோழன் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கி விட்டார். அதற்குப்பின் வெளியே வந்த சோழன் மீது நிலா கோபப்பட்டார்.
அய்யனார் துணை:
சோழன், நீங்கள் அவமானப்பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அப்படி செய்தேன் என்று ரொம்ப எமோஷனாக அழுது புலம்பினார். நிலாவும் சோழன் செய்த தவறை மன்னித்து விட்டார். அதற்குப்பின் நிலா, சோழனை அழைத்துக் கொண்டு ஓனரிடம் சென்றார். சோழனை பார்த்தவுடன் ஓனர் கோவப்பட்டார். சோழன் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார் ஓனருமே ஏற்றுக் கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், தன் ஓனர் காலில் விழுந்து எமோஷனலாக அழுது மன்னிப்பு கேட்கிறார். ஓனர், சோழனை மன்னித்துவிடுகிறார். பின் ஓனர், நிலா அசிங்கப்படவில்லை என்று நினைக்கிறாயா? இப்போதுதான் நிலாவிற்கு அசிங்கம். உனக்காக அவள் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டாள் என்று சொல்கிறார். இதனால் சோழன் வருத்தப்படுகிறார். பின் நிலா-சோழன் இருவரும் நடந்து வீட்டிற்கு வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது சோழன், தன்னுடைய காதலையும் தன்னுடைய ஆசையும் சொல்லி அழுகிறார். நிலாவுமே சோழனுடைய எமோஷனை புரிந்து கொண்டு ஆறுதல் சொல்லுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சோழன் தன்னுடைய அண்ணன் தம்பிகளிடம் எமோஷனலாக பேசி அழுகிறார். வீட்டில் எல்லோருமே சோழனுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். அதற்குப்பின் சேரன், எல்லா வீட்டு வேலையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறார். பாண்டியன் அவருக்கு உதவி செய்கிறார்






