விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் போன் செய்து நிலாவிடம் விசாரித்தார். நிலாவுமே எதுவும் பிரச்சனை என்று சொன்னார். உடனே சேரன், உனக்கு எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு வந்துவிடுமா என்று சொன்னார். அதற்குப்பின் நிலாவிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை எழுதி ஹாஸ்டலில் கொடுத்துவிட்டு சோழன் சொன்னார். இதை நிலாவின் தோழிகள் அவரிடம் கொடுத்து சோழனை மன்னிக்க சொல்லி கேட்டார்கள். நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் பல்லவனுக்கு அதிகமாக உடம்பு சரியில்லாமல் போனது.

சோழன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு எங்கேயோ சென்று விட்டார். இதனால் கோபப்பட்டு சேரன், பாண்டியன் இருவருமே பல்லவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்து போனார்கள். அப்போது வீட்டிற்கு வந்த சோழன், என்னானது என்று கேட்டார். கோபப்பட்டு பாண்டியன், சோழனிடம் சண்டை போனார். அதற்குப் பின் நிலாவிற்கு ஃபோன் செய்த பல்லவன், எனக்கு உடம்பு சரியில்லை. தயவு செய்து வீட்டிற்கு வந்து விடுங்கள் அண்ணி என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். நிலா எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் பல்லவனை பார்ப்பதற்கு நிலா வீட்டுக்கே வந்தார். நிலாவை பார்த்தவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பல்லவன், இங்கேயே இருங்கள். நீங்கள் இல்லாததால் எனக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிவிட்டது என்றெல்லாம் சொன்னார். அதற்கு நிலா, நான் உன்னை பார்த்துவிட்டு போகிறேன் என்றார். அதற்குப்பின் நிலா வேலைக்கு கிளம்பினார். அவருக்கு துணையாக சோழன் வந்தார். அப்போது சோழன், நீங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள்.

நேற்று எபிசோட்:
நான் வேண்டுமென்றால் வீட்டை விட்டு போகிறேன் என்று ஏதேதோ பேசி நிலாவை சமாதானம் செய்யப்பார்த்தார். ஆனால், நிலா எதுவும் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில் சோழன் பேசிய விஷயங்களால் நிலா சிரித்து விட்டார். அதற்குப்பின் நிலா, துணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு பழையபடி வீட்டிற்கு வந்து விட்டார். இதை பார்த்து சோழன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அப்போது நிலா, சோழனை பார்த்து எப்போ வீட்டை விட்டு போவீர்கள் என்று கேட்டார். சோழனும் சமத்தித்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், நீங்கள் வீட்டிற்கு வருவீர்கள் என்று எனக்கு தெரியும். அதற்கு காரணம், உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி தான். எவ்வளவு பிரச்சனையிலும் நீங்கள் அதை கழட்டவில்லை என்று சொல்கிறார். இதைக்கேட்ட நிலா, எதைப்பற்றியும் யோசிக்காமல் தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி சோழனிடம் கொடுத்து விடுகிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லாருமே ஷாக் ஆகிறார்கள். ஆனால், நிலா அது பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்கு நிலா, இந்த தாலியே போட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு டிசைனாக இருக்கிறது என்று தான் போட்டேன். மற்றபடி நான் வீட்டிற்கு வந்ததற்கும் இந்த தாலிக்கும் சம்பந்தமில்லை என்று சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
நிலா தாலியை கழட்டித் தந்ததால் சோழன் ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதற்குப்பின் மெக்கானிக்கல் ஷாப்பில் சோழன் வேதனையில் படுத்து கொண்டிருக்கிறார். அப்போது வந்த வானதி சோழனிடம் வம்பு இழுத்து இருவருமே சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பின் வானதியை அங்கிருந்து பாண்டியன் அழைத்து சென்று விடுகிறார். அதற்குப்பின் சோழன் தன்னுடைய ஓனரிடம் நடந்ததை பற்றி சொல்லி ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு பின் நிலா, விவாகரத்து கேட்கிறார். சோழன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






