விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், வானதியை அழைத்துக்கொண்டு ஊர் சுற்ற போனார். வானதிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. இன்னொரு பக்கம் சோழன் குக்கர் தேவைப்பட்டதால் வீட்டிற்கு வாங்கி வந்து நிலாவிடம் கொடுத்தார். அப்போது பல்லவன் பேச வந்தார். ஆனால், சோழன் கோபப்பட்டார். பின் ஒரு வழியாக நிலா இருவரையும் சமாதானம் செய்து பேச வைத்தார். இன்னொரு பக்கம் சேரன் வேலை செய்யும் இடத்திற்கு வந்த சந்தா, செங்கல் எல்லாம் எடுத்துக் கொடுத்து உதவி செய்தார். அதை பார்த்து பதறிப்போன சேரன், சந்தாவின் கைகளில் இருந்த அழுக்கை சுத்தம் செய்து உட்கார வைத்தார்.

பாண்டியன், வானதியை கோயிலுக்கு அழைத்து சென்றார். அதற்கு பிறகு ஹோட்டலுக்கு அழைத்து அழைத்து சென்றார். வானதி ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். அப்போது பாண்டியன், இதற்கு எல்லாம் காரணம் நிலா அன்னி தான். அவர்தான் உன்னை வெளியில் அழைத்து போக சொல்லி அறிவுரை சொன்னார் என்றார். இதனால் வானதி பயங்கரமாக கோபப்பட்டார். பாண்டியன், நாம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று என் வீட்டில் உள்ள எல்லோருக்குமே நினைக்கிறார்கள். அவர்களுக்கு உன்னை பிடிக்கும். நீதான் அவர்களைப் புரிந்து கொள்ள மாட்டுகிறாய் என்றார்.
அய்யனார் துணை:
வானதி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் நிலா தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து தன்னுடைய புது கம்பெனி திறந்து இருந்தார்கள். அப்போது மகேஷின் நண்பர், நிலா ஒரு ரூபா காசு கொடுக்காமல் ஓனராகிவிட்டார் என்று கிண்டலாக பேசி இருந்தார். அதனால் நிலாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் நிலா காசு கொடுக்காமல் புது கம்பெனி நடத்துவதை சொல்லிக் காட்டுகிறார். நிலா வேதனையுடன் வெளியே வந்து விட்டார். பின் நிலா, சோழனிடம் சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டு அழுதார்

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன் நிலாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு தன்னுடைய ஓனரை சந்திக்க வருகிறார். ஓனர், பணத்தை கட்டு கட்டாக வைத்திருக்கிறார். அப்போது சோழன், கம்பெனியில் நிலா அவமானப்பட்ட விஷயத்தை சொல்லி 5 லட்ச ரூபாய் பணத்தை கேட்கிறார். ஓனர், உன்னை நம்பி எவன்டா பணம் தருவான். இந்த பணம் வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. அதற்காகத்தான் எடுத்து வைத்திருக்கிறேன். என்னிடம் வேறு எந்த பணமும் இல்லை என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் ஓனர் கிளம்பியவுடன் அந்த பணத்தை சோழன் திருடி விடுகிறார். பின் அந்த பணத்தை சோழன், நிலாவை அவமானப்படுத்தியவர்கள் முன்பு கொடுக்கிறார். நிலாவும் அந்த பணத்தை கொடுத்து பார்ட்னராக சேர்கிறார். பின் நிலா, எப்படி பணம் வந்தது என்று கேட்கிறார். சோழன், நான் கடன் வாங்கினேன் என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். எல்லோருமே நிலாவிற்காக சோழன் செய்ததை பாராட்டுகிறார்கள்.
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, எல்லோரிடமும் சோழன் பணம் ஏற்பாடு செய்த விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார். அந்த சமயம் பார்த்து சோழனின் ஓனர் வீட்டிற்கு வருகிறார்.






