விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசனுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. இதை பார்த்து பதறிப் போன நிலா, ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்றார். ஆனால் நடேசன் வரவில்லை. பின் வீட்டில் இருக்கும் மாத்திரையை எடுத்து கொடுத்து போட சொன்னார். நிலா, நடேசனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சேரனிடம் சொல்லிவிட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் சோழன் வாடகை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது காயத்ரி விடாமல் போன் செய்து கொண்டிருந்தார். காயத்ரி விடாமல் சோழனுக்கு போன் செய்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் சோழன், என்னதான் பிரச்சனை என்றார். அதற்கு காயத்ரி, எதற்காக என்னை அவாய்ட் பண்ணுகிறீர்கள்? என்றார். அதற்கு சோழன், திடீரென்று உன் நண்பர்களிடம் என்னை காதலன் என்று அறிமுகம் செய்து வைக்கிறாய். நான் எப்போது உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னேன் என்றார். அதற்கு காயத்திரி, எனக்கு உங்களை பிடித்திருந்தது என்று சொல்லிதானே உங்களிடம் பேச ஆரம்பித்தேன். நீங்களும் என்னை காதலிக்கிறீர்கள் என்று நினைத்தேன். இப்போது இல்லை என்று சொல்கிறீர்கள். என்ன நடந்தது? எதற்காக இப்படி மாறிவிட்டீர்கள் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
அய்யனார் துணை:
ஒரு கட்டத்தில் கடுப்பான சோழன் போனை ஆப் செய்து வந்தார். இதனால் காயத்ரி ரொம்ப எமோஷனாக அழுது கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வானதி, நான் முக்கியமா? உன் குடும்பம் முக்கியமா? என்று சொன்னவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. அதற்குப்பின் நடேசனுக்கு உடம்பு சரியில்லாதால் நிலா அவரை கவனித்துக் கொண்டார். அப்போது வீட்டிற்கு சோழன் வருகிறார். நிலா கேட்கும் கேள்விக்கு சோழனால் ஒழுங்காக பதில் சொல்ல முடியவில்லை. பின் பல்லவன், சோழனின் போனை பார்த்துவிட்டு ப்ரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா ரெடியாகி வேலைக்கு கிளம்புகிறார். பல்லவன், பஸ் ஸ்டாண்டில் சோழனுக்காக காயத்ரி போன் மேல் போன் செய்கிறார். இதனால் சோழன், போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார். அதனால் சோழனின் ஓனர், வீட்டுக்கே வந்து வண்டி புக் செய்து இருக்கிறார்கள். வேலைக்கு கிளம்பு என்று சொல்லிவிடுகிறார். அதனால் சோழன் வேலைக்கு தயாராகிறார். இன்னொரு பக்கம் பஸ்டாண்டில் சோழன் போன் எடுக்காததால் காயத்ரி, பல்லவனிடம் விசாரிக்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று பல்லவன், காயத்ரியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

சீரியல் ட்ராக்:
காயத்ரியை பார்த்தவுடன் சோழனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அப்போது காயத்ரி, ஏன் போன் எடுக்கவில்லை. எதற்காக என்னை அவாய்ட் செய்தீர்கள் என்றெல்லாம் கேட்டார். இதை கேட்டு சேரனுக்கு ஷாக்காக இருக்கிறது. காயத்ரியை தனியாக அழைத்து சென்று சோழன் பேசுகிறார். அதற்குப்பின் பாண்டியன், சோழனை காயத்ரி காதலிக்கும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார். இதை கேட்டு சேரனுக்கு இன்னும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் சோழன், எனக்கும் உங்களுக்கும் செட்டாகாது. நான் உங்களை காதலிக்கவே இல்லை என்கிறார். அதற்கு காயத்ரி, நான் உங்களிடம் ஆரம்பத்திலே காதலிக்கிறேன் என்று சொல்லி தான் பழகினேன் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






