விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலா இருவரும் போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள். அப்போது ராகவ், நிலாவிற்கு பொங்கல் வாழ்த்து சொல்லி இதுதான் உனக்கு தனியாக கொண்டாடும் கடைசி பொங்கல். அடுத்த வருடத்தில் இருந்து நாம் சேர்ந்து கொண்டாடுவோம் என்றார். இதனால் கடுப்பான சோழன், ராகவை திட்டி மெசேஜ் அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் பல்லவன், சக்கரை பொங்கலை எடுத்துக்கொண்டு காயத்ரி பார்க்கப் போனார். அங்கு இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

வானதி, நான் எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்கிறேன். நீ எதற்காக அமைதியாக இருக்கிறாய் என்றார். பாண்டியன், முதலில் சேரன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகணும் என்றார். வானதி, உங்க அண்ணனுக்கு பொண்ணு தான் ரெடியா இருக்கிறது. அவர்களுக்கு சீக்கிரம் முடிந்து விடும். வேற என்ன பிரச்சனை என்றார். பாண்டியன், எல்லோரும் தங்குவதற்கு ரூம் வேண்டும் என்றார். வானதி, உங்கள் அண்ணி ஹாஸ்டலில் தங்கி கொள்ளட்டும். அவர்களை வெளியே அனுப்பி விடு என்றார். இதனால் பாண்டியன் கோபப்பட்டு பேசினார். பின் வானதி-பாண்டியன் இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.
அய்யனார் துணை:
அப்போது பல்லவன் வந்ததால் பாண்டியன் அமைதியாகி விட்டார். வானதி சென்ற பின் சேரன், வானதி வீட்டிற்கு போகும் விஷயத்தை பற்றி சொன்னார். நடேசன், இந்த கல்யாணம் வேண்டாம். பாண்டியன் வாழ்க்கை வீணாகி விடும். அந்த பொண்ணு இந்த வீட்டிற்கு சரியாக இருக்காது என்றார். பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை, அமைதியாகவே இருந்தார். சேரன், நாளை வானதி வீட்டுக்கு போகலாம் என்றார். அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், வாழ்த்து சொன்னால் இப்படியா மோசமாக மெசேஜ் அனுப்புவது என்று கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார். நிலாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் தன்னுடைய தோழியிடம் நிலா வேலைக்கு ஏற்பாடு செய்ய சொல்லி கேட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி, சீக்கிரமாக என்னை பெண் கேட்டு வீட்டிற்கு வாருங்கள் என்று சந்தோசமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், பாண்டியனுக்கு அதில் விருப்பமே இல்லை. தயங்கிக் கொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் பல்லவன் காயத்ரி ரோட்டில் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது சோழனை பார்த்தவுடன் பல்லவன், காயத்ரியை தனியாக அழைத்து சென்று ஒளிந்து கொள்கிறார். பலவான், இந்த விஷயம் சோழனுக்கு தெரிய வேண்டாம் என்று சொல்கிறார். பின் வீட்டிற்கு வந்த நிலா, எதற்காக ராகவிற்க்கு மோசமாக மெசேஜ் அனுப்பி இருந்திர்கள்.

சீரியல் ட்ராக்:
உங்களால் நான் அவமானப்பட்டு நின்றேன் என்று நடந்ததை எல்லாம் சொல்கிறார். சோழன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இருவரும் சண்டை போடுவதைப் பார்த்து சேரன் விசாரிக்கிறார். நிலா, ஆபீசில் நடந்தது எல்லாம் சொல்லி பாண்டியனுக்கும் உங்களுக்கும் திருமணம் முடிந்த உடனே நான் விவாகரத்து வாங்கிக்கொண்டு இந்த வீட்டை விட்டும் இந்த ஆளை விட்டும் சென்று விடுவேன் என்று சோழனை பார்த்து சொல்கிறார். இதனால் சோழன் உடைந்து போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






