விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், தன்னால் முடிந்த தொகையை பாண்டியனிடம் கொடுத்தார். சோழன், தன் ஓனரிடம் வாங்கிய பணத்தை பாண்டியன் இடம் கொடுத்தார். உடனே நிலா, ஒரு பேப்பரில் 60,000 என்று எழுதிக் கொண்டு வந்து கொடுத்தார். பல்லவன், உங்களுக்கு பணம் ரெடி பண்ண தான் அண்ணி இரண்டு நாட்களாக தூங்காமல் எக்ஸ்ட்ரா வேலை செய்து சம்பாதித்தார் என்றார். இதைக் கேட்டு பாண்டியன் எமோஷனல் ஆகி அழுதார். இந்த பணத்தை எல்லாம் பார்த்து பல்லவனின் அம்மா திட்டம் போட்டார்.

எல்லோரும் கொடுத்த பணத்தை எண்ணி பார்த்தார்கள். மூன்று லட்சத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் குறைவாக இருக்கிறது. இதை கேட்ட நடேசன், தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்தார். பின் நடேசன், பத்தாயிரத்தை கொடுத்துவிட்டு கடைக்கு ஓனராகு என்று சொல்லிவிட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்து பாண்டியனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இவர்கள் பணத்தை வைத்திருப்பதை பார்த்த பல்லவன் அம்மா கோமலு, தன்னுடைய கணவருக்கு போன் செய்து தகவலை சொன்னார். இதையெல்லாம் நிலா கேட்டு விட்டார்.
அய்யனார் துணை:
அதற்குப்பின் நிலா, நடேசன் இடம் பல்லவனின் அம்மாவை பற்றி மீண்டும் விசாரித்தார். ஆனால், அவர் எதுவுமே சொல்லாமல் திட்டிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியன், தன்னுடைய வீட்டில் எல்லோரும் பணத்தை ஏற்பாடு செய்து தந்த விஷயத்தை சொன்னார். இதைக் கேட்டு வானதி, அப்போ நான் பணம் தரவில்லை என்று குத்தி காண்பிக்கிறாயா? என்றெல்லாம் நக்கல் அடித்து தெனாவட்டாக பேசி இருந்தார். பாண்டியன், சந்தோசமான செய்தியை பேச தான் அழைத்தேன் என்றார். வானதி, இதற்கு தான் கூப்பிட்டாயா என்று கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பல்லவனின் அம்மாவிற்கு அவருடைய கணவர் ஃபோன் செய்து பணத்தைப் பற்றி கேட்கிறார். கொஞ்ச நேரம் கழித்து கோமலு கணவர் வீட்டிற்க்கே வந்து
விடுகிறார். பின் கோமலு, அவருடைய கணவர் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த நடேசன் கோபப்பட்டு கத்துகிறார். உடனே அங்கிருந்து கோமலு கணவர் தப்பித்து ஓடி விடுகிறார். பின் நடேசன், என்ன திட்டத்தோடு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். உண்மையை சொல் என்று பல்லவன் அம்மாவின் கழுத்தை நெருக்குகிறார்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து பல்லவன் வந்து விடுகிறார். கோமலு, இதற்கு தான் இங்கு நான் இத்தன நாட்களாக வராமல் இருந்தேன். அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்றெல்லாம் நாடகமாடுகிறார். இதெல்லாம் பார்த்து பல்லவனுக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் வீட்டில் தன்னுடைய அண்ணன்களிடம் நடந்ததை எல்லாம் பல்லவன் சொல்லி புலம்புகிறார். அதற்குப்பின் எல்லோரும் தூங்கி விடுகிறார்கள். கோமலு, அவருடைய கணவர் இருவருமே வீட்டிற்கு பின்பக்கம் சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோமலு, பணத்தை சீக்கிரம் எடுத்துக் கொண்டு வருகிறேன். இங்கிருந்து கிளம்பு என்று சொல்கிறார். இதை கேட்ட நிலா ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






