விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், பாண்டியன் யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் நிலாவின் அம்மா, தனியாக உன்னிடம் பேச வேண்டும். வெளியே வா போகலாம் என்றார். நிலா தயங்கி நிற்கிறார். நிலா அப்பா, பயப்படாதே உன்னை இங்கேயே கொண்டு வந்து விடுகிறேன் என்று அழைத்து சென்றார். சோழன், நிலா தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாள் என்று சேரனிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். பின் கோயிலுக்கு நிலாவை அழைத்து சென்றார்கள். அங்கு நிலாவின் அப்பா ரொம்ப அக்கறையாக பேசி இருந்தார். தங்களுடைய வீட்டிற்க்கே வந்து விட சொல்லி கேட்டார். நிலா, நான் வரவில்லை இங்கேயே இருக்கிறேன் என்றார்.

நிலாவின் அப்பா, உனக்கு வேலை தான் முக்கியம் என்றால் நாங்களும் சென்னையில் உன் உடன் தங்குகிறோம். அவர்கள் வீட்டில் வேணாம் என்றார். இதனால் நிலா ஒத்து கொண்டார். பின் அய்யனார் வீட்டிற்கு வந்த நிலாவின் அப்பா, நிலாவுடன் சென்னையிலேயே தங்கும் விசயத்தை சொன்னார்கள். சோழன், அதெல்லாம் நிலாவை இங்கிருந்து அனுப்ப முடியாது என்றார். நிலா எதுவும் பேசாமல் தன்னுடைய துணிகளை எல்லாம் பேக் செய்து கொண்டு வெளியே வந்தார். சோழன் எமோஷனலாக அழுதார். நிலாவின் அப்பா தாங்கள் தங்கி இருக்கும் வீட்டு அட்ரஸை சிலரிடம் கொடுத்து விட்டு சென்றார்.
அய்யனார் துணை:
நிலா வீட்டை விட்டு போனதால் சோழன் ரொம்பவே எமோஷனலாக உடைந்து போயிருந்தார். நடேசன் வேண்டும் என்று சோழனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சோழன், நடேசனை அடிக்க வந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே தடுக்க, கலவரமே வெடிக்கிறது. அந்த சமயம் நிலாவின் அப்பா மீண்டும் சோழன் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், இதனால் தான் என் மகளை இங்கு விடக்கூடாது என்று சொல்கிறேன். எப்படியாவது நான் நிலாவை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்று விடுவேன் என்றார். அதற்குப்பின் கடையில் பாண்டியன், வானதியிடம் வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லி வருத்தப்பட்டார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வானதி, தன்னுடைய தோழிகளிடம் வெளியே செல்வதால் பாண்டியனை வரச் சொல்லி கட்டாயப்படுத்தினார். அதற்கு பின் நிலாவிற்காக அவருடைய அம்மா பார்த்து பார்த்து சமைத்து வைத்தார். நிலா தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்தாலும் சோழன் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து சோழன், நிலாவிற்காக பரோட்டா வாங்கி வந்து தந்தார். நிலா, தன் அம்மா சமைத்த சமையலை சாப்பிடாமல் சோழனுடன் சேர்ந்து அவர் வாங்கி வந்த பரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்து நிலாவின் அம்மாவிற்கு பயங்கர கடுப்பானது.
https://www.youtube.com/watch?v=iMhKdmMYr9A
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அய்யனார் குடும்பத்திலிருந்து ஒவ்வொருவராக நிலாவை பார்க்க வருகிறார்கள். அதை பார்த்து நிலாவின் அப்பா மனோகர், அவருடைய அம்மா இருவருக்கும் கடுப்பாகிறது. பின் சேரன் கிளம்பும்போது மனோகர் வீட்டில் விடுவதாக சொல்லி காரில் அழைத்து செல்கிறார். அப்போது மனோகர், நிலா-சோழன் பிரிவு பற்றி கேட்கிறார். சேரனும் உண்மையை சொல்லி விடுகிறார்.






