விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி வேண்டும் என்று வம்பு இழுத்து பாண்டியனிடம் சண்டை போட்டார். பின் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதை வானதியின் மாமா பார்த்து விட்டார். இதைப்பற்றி வானதியின் மாமா வீட்டில் சொல்லி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்றார். உடனே வானதியின் அப்பா- அம்மா இருவருமே சம்மதித்தார்கள். ஆனால், வானதியின் அண்ணன் தான் பிரச்சனை செய்தார். இருந்தாலும் வானதியின் அப்பா அம்மா இருவரும் தன் மகனை திட்டி விட்டு பாண்டியனுக்கே வானதியை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து விட்டார்கள்.

பொங்கல் பண்டிகை என்பதால் நிலா, வீட்டில் உள்ள எல்லோரையும் கோலம் போட அழைத்தார். பின் வரைந்த கோலத்தின் மீது நிலா கலர் கொடுக்க சொன்னார். எல்லோரும் நிலா சொல்வதை போல் செய்தார்கள். கோலமும் அழகாக வந்து விடுகிறது. மொத்த குடும்பமும் கோலத்தின் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். மறுநாள் காலையில் பொங்கல் பண்டிகை என்பதால் நிலா எல்லோரையும் எழுப்பி ரெடியாக சொன்னார்.
அய்யனார் துணை:
வீட்டில் உள்ள எல்லோருமே மும்முரமாக தயாரானார்கள். இன்னொரு பக்கம் வானதி, பாண்டியன் வீட்டிற்கு வருவதற்காக தயாராகி நின்றார். பின் வானதி, பாண்டியன் வீட்டுக்கு பொங்கல் வைக்க போவதாக சொன்னார். உடனே வானதியின் அம்மா, நம் வீட்டில் பொங்கல் வைக்கணும் என்றார். வானதி முடியாது என்றார். வானதி அப்பா, எங்களுக்கு பாண்டியனை உனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம். அவர்கள் வீட்டில் வந்து பெண் கேட்க சொல் என்று சொன்னார். இதைக் கேட்டு வானதிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதியின் அப்பா அம்மா இருவரும் வீட்டில் பொங்கல் வைக்கலாம் என்று சொல்கிறார்கள். ஆனால், வானதி கேட்கவில்லை. பின் வானதி கிளம்பி பாண்டியன் வீட்டிற்கு வந்து விடுகிறார். பாண்டியன் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக பொங்கல் வைக்கிறார்கள். நடேசன், நிலாவை ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து வானதிக்கு கோபம் தான் வருகிறது. இருந்தாலும் அவர் அதை கண்டு கொள்ளாமல் பாண்டியனை தனியாக அழைத்து சென்று போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
நிலா பொங்கல் வைத்துவிட்டு மற்ற வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். பின் வீட்டில் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு சேரனுக்கு எல்லா உதவியும் நிலா செய்கிறார். பின் வீட்டில் எல்லோருக்குமே நிலா-சேரன் இருவரும் சேர்ந்து பரிமாறுகிறார்கள். அப்போது வானதி, நான் ஒரு விஷயத்தை சொல்லணும் என்கிறார். பாண்டியன், எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்கிறார். அப்போது வானதி, எங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள் என்று சொல்கிறார்.






