விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் சிரித்துக்கொண்டு, நான் எங்கேயும் போக மாட்டேன் என்றார். இதையெல்லாம் பார்த்து சோழனுக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. பின் இதைப்பற்றி விசாரிப்பதற்காக அனீஸ் வீட்டிற்கு சோழன் சென்றார். அங்கு சோழன், சேரன் அண்ணாவுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி செய்கிறார்? எதற்காக சிரித்துக் கொண்டே இருக்கிறார் என்றார். அதற்கு அனீஸ், சந்தாவை பெண் கேட்ட விஷயத்தை பற்றி சோழனிடம் சொன்னார். இதைக்கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

சேரன், சந்தாவை திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதித்ததால் சோழனுக்கு தலைகால் புரியவில்லை, சந்தோஷத்தில் வீட்டிற்கு வந்தார். பின் வீட்டில் சேரன், அண்ணன் இப்படி இருப்பதற்கு காரணம் தெரிந்து விட்டது என்று அனீஸ் சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அந்த சமயம் பார்த்து சேரன் வீட்டிற்கு வந்தார். அப்போது சேரனிடம் சந்தாவை பற்றி எல்லோரும் விசாரித்தார்கள். வெட்கத்தில் சேரன் அங்கிருந்து சென்று விட்டார்.
அய்யனார் துணை:
இன்னொரு பக்கம் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, மீண்டும் பிரச்சனை என்றால் போன் செய்து பேச மாட்டாயா? எதற்காக இப்படி என்னை ரொம்பவே கஷ்டப்படுத்துகிறாய் என்று வழக்கம் போல பாண்டியன் வானதியை மோசமாக திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகி வானதி அங்கு இருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் நிலா,சோழன், பல்லவன் மூவருமே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது காயத்ரி பார்த்தவுடன் நிலாவை வெறுபேற்ற சோழன் வழக்கம் போல வலிந்து பேசினார். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு பயங்கர கடுப்பானது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், வேலை செய்யும் இடத்திற்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு சந்தா வருகிறார். அப்போது சந்தா, நான் எல்லோருக்கும் சேர்த்து டுத்து வந்து விட்டேன். இதை சாப்பிடுங்கள் என்று பரிமாறிக் கொடுக்கிறார். இருவருமே காதலோடு பார்த்துக் கொள்கிறார்கள். பின் சந்தா, தனக்கு வலையில் வேண்டும் என்று கேட்கிறார். சேரணுமே வாங்கித் தருகிறேன் என்று பேசிக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வருவதாக வக்கீல் போன் செய்து சொல்கிறார். நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த சமயம் பார்த்து ராகவ், ஒரு புதிய கம்பெனிக்கு ஆடர் கொடுக்க வேண்டும். சீக்கிரம் பிளான் ரெடி பண்ணி வையுங்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
நிலாவுமே சரி என்று ஒத்துக் கொள்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சேரன் காதலை பற்றியும் அவருடைய திருமணத்தைப் பற்றியும் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த நடேசன், உனக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கிறதா? என்று கேட்டார். சேரனும் சிரித்துக்கொண்டே ஆமாம் என்றார். அதற்கு நடேசன், இந்த கல்யாணம் நடக்காது. அந்த பெண் நம் குடும்பத்துக்கு செட்டாக மாட்டாள். இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லை என்றெல்லாம் சொல்கிறார். உடனே சேரனின் தம்பிகள் எல்லோருமே நடேசனை திட்டுகிறார்கள். அதற்குப்பின் சோழன், கோர்ட்டுக்கு போகும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார்.
நிலா, எனக்கு வேலை இருக்கிறது. என்னால் போக முடியாது என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






