விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன்,ராகவ் ஏதாவது தொல்லை செய்யப் போகிறான். அங்கே வேலை செய்யனுமா என்றார். நிலா, எனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் முக்கியம். பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எதுவும் ராகவிடம் சண்டை போட வேண்டாம் என்றார். அதற்குப்பின் வீட்டை சரி செய்யும் வேலையை சேரன், சோழன், பாண்டியன் மூவரும் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது போன் செய்த வானதியிடம் பாண்டியன் பாம்பு வந்த விஷயத்தைப் பற்றி சொன்னார். பொறாமையில் வானதி, நிலாவை திட்டினார்.

சேரன், சோழன், பாண்டியன் மூவருமே வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு உதவ சந்தா, அனிஷ் இருவரும் வந்தார்கள். சந்தா, நடேசன் இடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். பின் வேலையும் மும்முரமாக நடக்கிறது. அந்த சமயம் வந்த நடேசன் அண்ணா, தங்கை இருவரும் பிரச்சனை செய்தார்கள். நடேசன் அவர்களை திட்டி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் ஆபீஸிற்கு வந்ததாக நிலாவிடம் ராகவ் ரொம்ப கோபமாக வேலையை சீக்கிரம் முடிக்க சொன்னார். பின் நிலா, தன் தோழியிடம் வேறு ஒரு இடத்தில் வேலைக்கு ரெடி பண்ணி தர சொல்லி கேட்டார்.
அய்யனார் துணை:
அதற்கு பின் நடேசன் அண்ணன்- தங்கை இருவரும் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார்கள். நடேசன் வீட்டிற்கு வந்த போலீஸ், இங்கு எந்த வேலையும் செய்யக்கூடாது வெளியில் கிளம்புங்கள் என்றார். சேரன் எவ்வளவோ கெஞ்சியுமே நடேசன் அண்ணன், தங்கை மனம் மாறவில்லை. இதனால் நடேசனுக்கும், அவருடைய தங்கை-அண்ணனுக்கும் இடையே கலவரம் வெடிக்கிறது. கோபத்தில் போலீஸ், நடேசன் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார்கள். வீட்டிற்கு சீல் வைப்பதாகவும் சொன்னார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நடேசன் அந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என்று பிரச்சனை செய்கிறார். சோழன், எல்லோரும் அவர்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். இனிமேலும் இங்கு இருப்பது சரி இல்லை என்று சொல்கிறார். பாண்டியன், சேரன், பல்லவன் எல்லோருமே வருத்தப்பட்டு தங்களுடைய பொருள்களை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். ஆனால், நடேசன் மட்டும் முடியாது என்று அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் வந்த நிலாவிடம் நடந்ததை எல்லாம் சோழன் சொல்கிறார். பின் நிலாவும் எவ்வளவோ பேசி பார்த்து இருக்கிறார். யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் மொத்த குடும்பமே தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். போலீஸ் வீட்டிற்கு சீல் வைத்து விடுகிறது. கோபத்தில் நடேசன், தன்னுடைய அண்ணனுக்கு மண்ணை தூவி சாபம் விட்டு வருகிறார். அதற்குப்பின் ஹோட்டலில் ரூம் எடுத்து நடேசன் குடும்பம் தங்கி கொள்கிறார்கள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மொத்த குடும்பமும் தவித்து நிற்கிறது.






