விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன் உயிலை எடுப்பதற்காக தன்னுடைய வீட்டிற்கு சென்றார். அங்கு வீடு பூட்டு போட்டிருப்பதால் ஒரு கல் எடுத்து உடைக்கிறார். அந்த சமயம் வந்த சேரன், இதெல்லாம் தப்பு வேண்டாம் என்று சொன்னார். ஆனால், நடேசன் கேட்கவில்லை. பின் அந்த இடத்திற்கு வந்த நடேசன் தங்கை பிரச்சினை செய்தார். பின் சேரன், தன் அப்பாவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் சோழன்- நிலா இருவரும் உயில் யாரிடம் இருக்கிறது? எப்படியாவது எடுக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள்.

அப்போது பாண்டியன், பல்லவன் இருவரும் நாங்கள் திருடர்கள் போல பெரியப்பாவிடம் பேசி அந்த உயில் இருக்கும் இடத்தை பற்றி விசாரிக்கிறோம் என்றார்கள். நிலா, இந்த ஐடியா சரி என்று இருவரையும் அனுப்பி வைத்தார். பின் பல்லவன்- பாண்டியன் இருவருமே திருடர்கள் போல மிரட்டி உயில் எங்கே இருக்கிறது? என்று கேட்டார்கள். அதற்கு பெரியப்பா, உயில் என்னிடம் இல்லை. நடேசன் இடம் தான் இருந்தது. ஆனால், அவன் தொலைத்து விட்டான். அவனிடம் தான் விசாரிக்கணும் என்றார். பின் அந்த இடத்திற்கு சோழன்- நிலா இருவரும் வந்து பெரியப்பாவை காப்பாற்றுவது போல அந்த திருடர்களை அடித்து அனுப்பி விட்டார்கள்.
அய்யனார் துணை:
நிலா, சோழன் இருவரும் பத்திரத்தை எடுப்பதற்காக வீட்டிற்குள் போகணும் என்று திட்டம் போட்டார்கள். பின் கேட்டின் மீது ஏறி குதித்து நிலா-சோழன் உள்ளே சென்று விட்டார்கள். அதற்குப்பின் ஓட்டை பிரித்துக் கொண்டு சோழன் வீட்டுக்குள் இறங்கினார். நிலா வீட்டின் மீது பயத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். வீட்டிற்குள் சென்ற சோழன் எல்லா இடத்திலும் உயிலை தேடினார். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன் வீடு முழுக்க தேடுகிறார். ஆனால், உயில் கிடைக்கவில்லை. இதனால் கோபத்தில் நிலா, நன்றாக தேடுங்கள் என்று கத்துகிறாள். பின் ஒரு வழியாக ஓரிடத்தில் இருந்த பையைத் திறந்து சோழன் பார்க்கிறார். உயில் கிடைத்து விடுகிறது. இதை சோழன் சொன்னவுடன் நிலா சந்தோஷப்படுகிறார். பின் சோழன் வெளியே வந்து விடுகிறார். இருவரும் வீட்டின் கீழே இறங்குகிறார்கள். அந்த சமயம் பார்த்து நடேசன் அண்ணன் அங்கு வருகிறார்.

சீரியல் ட்ராக்:
வீட்டை வீட்டை சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று நடேசன் அண்ணன் பார்க்கிறார். அதற்குள் நிலா- சோழன் இருவரும் ஒளிந்து கொள்கிறார்கள். நடேசன் அண்ணன் கிளம்பியுடன் நிலா-சோழன் அங்கிருந்து எப்படியோ வந்து விடுகிறார்கள். பின் ஹோட்டலுக்கு வந்த நிலா, உயில் கிடைத்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டு பேசுகிறார். பின் எல்லோரும் தூங்கி இருப்பதால் நிலா- சோழன் இருவரும் ஒரே ரூமில் தங்கிக் கொள்கிறார்கள்.






