விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வீட்டில் உள்ள எல்லோரிடமும் பல்லவன் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டார். ஆனால், யாருமே பேசவில்லை. பின் பல்லவன், நடேசன் இடம் பேச போனார். நடேசன் பல்லவனை மன்னித்து அவரிடம் தன்னுடைய காதல் கதையை சொன்னார். அதற்குப்பின் வானதியிடம் சோழன் பேசிய விஷயத்தை எல்லாம் பாண்டியன் சொன்னார். நிலா, உங்களால் பாண்டியனுக்கும் வானதிலும் பிரச்சனை வந்திருக்கும். இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று சோழனை திட்டினார்.

பின் பாண்டியனிடம் நிலா, நீங்கள் வானதியை அழைத்துக் கொண்டு நேரத்தை செலவிடுங்கள் என்றார். அதற்குப்பின் நிலாவின் தோழி, ஸ்டார்ட் அப் விஷயம் பேச வந்தேன். நீ எந்த பணத்தையும் கொடுக்க தேவையில்லை. உன்னால் முடியும் போது கொடு. நாங்கள் இருவரும் பணத்தை போட்டு தொழில் தொடங்கலாம். மூன்று பேருமே அந்த கம்பெனிக்கு ஓனர் என்றார். நிலா தயங்குகிறார். சோழன், சேரன் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். நிலா, எல்லோரும் கட்டாயப்படுத்தியதால் ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் கடையில் பாண்டியன், வானதிக்காக காத்து கொண்டு இருந்தார்.
அய்யனார் துணை:
பாண்டியன், வானதியை அழைத்துக்கொண்டு ஊர் சுற்ற போனார். வானதிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. இன்னொரு பக்கம் சோழன் குக்கர் தேவைப்பட்டதால் வீட்டிற்கு வாங்கி வந்து நிலாவிடம் கொடுத்தார். அப்போது பல்லவன் பேச வந்தார். ஆனால், சோழன் கோபப்பட்டார். பின் ஒரு வழியாக நிலா இருவரையும் சமாதானம் செய்து பேச வைத்தார். இன்னொரு பக்கம் சேரன் வேலை செய்யும் இடத்திற்கு வந்த சந்தா, செங்கல் எல்லாம் எடுத்துக் கொடுத்து உதவி செய்தார். அதை பார்த்து பதறிப்போன சேரன், சந்தாவின் கைகளில் இருந்த அழுக்கை சுத்தம் செய்து உட்கார வைத்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், வானதியை கோயிலுக்கு அழைத்து சென்றார். அதற்கு பிறகு ஹோட்டலுக்கு அழைத்து அழைத்து செல்கிறார். வானதி ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார். அப்போது பாண்டியன், இதற்கு எல்லாம் காரணம் நிலா அன்னி தான். அவர்தான் உன்னை வெளியில் அழைத்து போக சொல்லி அறிவுரை சொன்னார் என்றார். இதனால் வானதி பயங்கரமாக கோபப்படுகிறார். பாண்டியன், நாம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று என் வீட்டில் உள்ள எல்லோருக்குமே நினைக்கிறார்கள். அவர்களுக்கு உன்னை பிடிக்கும்.

சீரியல் ட்ராக்:
நீதான் அவர்களைப் புரிந்து கொள்ள மாட்டுகிறாய் என்று சொல்கிறார். வானதி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் நிலா தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து தன்னுடைய புது கம்பெனி திறந்து இருக்கிறார்கள். அப்போது மகேஷின் நண்பர், நிலா ஒரு ரூபா காசு கொடுக்காமல் ஓனராகிவிட்டார் என்று கிண்டலாக பேசுகிறார். அதனால் நிலாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் நிலா காசு கொடுக்காமல் புது கம்பெனி நடத்துவதை சொல்லிக் காட்டுகிறார். நிலா வேதனையுடன் வெளியே வந்து விடுகிறார். பின் நிலா, சோழனிடம் சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டு அழுகிறார்






