விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலாவை அவமானப்படுத்தியவர்கள் முன்பு கொடுத்தார். நிலாவும் அந்த பணத்தை கொடுத்து பார்ட்னராக சேர்கிறார். பின் நிலா, எப்படி பணம் வந்தது என்றார். சோழன், நான் கடன் வாங்கினேன் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். எல்லோருமே நிலாவிற்காக சோழன் செய்ததை பாராட்டுகிறார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, எல்லோரிடமும் சோழன் பணம் ஏற்பாடு செய்த விஷயத்தை சொல்லி சந்தோஷப்பட்டார். அந்த சமயம் பார்த்து சோழனின் ஓனர் வீட்டிற்கு வந்தார்.

ஓனர், ஆபீஸில் வைத்த பணத்தை நீ பார்த்தாயா? பணம் எண்ணும்போது நீதான் இருந்தாய். பணத்தை காணவில்லை என்றார். சோழன், எனக்கு எதுவும் தெரியாது. நான் மட்டும்தான் அங்கு வேலை செய்கிறேனா? என்றார். வேதனையிலேயே ஓனர் அங்கிருந்து கிளம்பினார். வீட்டில் ஓனர் வந்ததை பற்றி கேட்கிறார்கள். சோழன் ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். மறுநாள் காலையில் ஓனர், சோழனை ஆபீஸ்க்கு வரச் சொன்னார். பின் ஓனர், சோழன் பணம் திருடிய வீடியோ ஆதாரத்தை காண்பித்தார். சோழன் காலில் விழுந்து தன் ஓனரிடம் மன்னிப்பு கேட்டார்.
அய்யனார் துணை:
ஓனர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின் ஓனர், போலீஸிடம் ஃபோன் செய்து சோழன் மீது புகார் கொடுத்து விட்டார். சோழன் போலீஸிடம் கெஞ்சினார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. போலீஸ் சோழனை கைது செய்தார்கள். இன்னொரு பக்கம் நிலா- சேரன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து சேரனுக்கு போன் செய்த ஓனர், சோழன் செய்த வேலை எல்லாம் சொன்னார். அவமானத்தில் நிலா நிற்கிறார். சேரன் ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, தன் கம்பெனியில் கொடுத்த பணத்தை மீண்டும் வாங்கி சோழன் ஓனரிடம் கொடுக்கிறார். பின் சேரன், ஓனரிடம் கை கால்களில் விழுந்து சோழன் மீது போட்ட கேசை வாபஸ் வாங்க சொல்கிறார். பின் ஓனர், நிலா, சேரன் மூவருமே போலீஸ் ஸ்டேஷன் போகிறார்கள். அங்கு ஓனர், சோழன் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கி விடுகிறார். அதற்குப்பின் வெளியே வந்த சோழன் மீது நிலா கோபப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:
சோழன், நீங்கள் அவமானப்பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அப்படி செய்தேன் என்று ரொம்ப எமோஷனாக அழுது புலம்புகிறார். நிலாவும் சோழன் செய்த தவறை மன்னித்து விடுகிறார். அதற்குப்பின் நிலா, சோழனை அழைத்துக் கொண்டு ஓனரிடம் செல்கிறார். சோழனை பார்த்தவுடன் ஓனர் கோவப்படுகிறார். சோழன் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார் ஓனருமே ஏற்றுக் கொள்கிறார்.






