விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், சோழன்- நிலா இருவரும் விவாகரத்து வாங்க இருந்தார்கள். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை என்று சொன்னார். இதை எல்லாம் கேட்ட ராகவிற்கு உள்ளுக்குள் சந்தோசமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் வானதியின் அப்பா- அம்மா இருவருமே பாண்டியன் பெருந்தன்மையாக நடந்து கொண்ட விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். இது எல்லாம் கேட்ட வானதி ரொம்பவே சந்தோசத்தில் துள்ளி குதித்தார்.

இன்னொரு பக்கம் சோழன், தன் ஓனரிடம் ராகவ் விஷயத்தை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வேலை முடித்துவிட்டு நிலா கிளம்ப பார்த்தார். உடனே ராகவ், சின்ன வேலை இருக்கிறது காத்துக் கொண்டிருங்கள் என்றார். எல்லோரும் கிளம்பியுமே நிலாவை விடாமல் ஆபீஸ்லயே இருக்க சொன்னார். அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, தன்னுடைய அப்பா- அம்மா பேசிய விஷயத்தை சொல்லி ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
அய்யனார் துணை:
ராகவ், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டு கோபப்பட்ட நிலா, நான் ஏற்கனவே கல்யாணமானவள். அப்படியெல்லாம் பேசாதீர்கள் என்றார். ராகவ், உங்கள் கல்யாண கதை. எல்லாம் எனக்கு தெரியும். இப்பதான் சேரன் இடம் பேசி விட்டு வருகிறேன் என்றார். இதனால் நிலாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது. ராகவ், நீங்கள் எதற்கு அந்த வீட்டில் இருக்கிறீர்கள்? நீங்கள் எதற்காக அங்க இருக்கணும், உங்களுக்கு நான் வீடு வாங்கி தருகிறேன்.

சீரியல் ட்ராக்:
அங்கு வந்து தங்குங்கள். சீக்கிரமாக விவாகரத்து செய்துவிட்டு வந்து விடுங்கள் என்றெல்லாம் சொன்னார். இதனால் கொந்தளித்த நிலா, ராகவை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இன்னொரு பக்கம் கடுப்பில் இருந்த சோழன் பாண்டியன் போனை கீழே போட்டு உடைத்து விட்டார். இதனால் சோழன்- பாண்டியன் இடையே சண்டை நடக்கிறது. ஒரு வழியாக சேரன் அதை தடுத்து விட்டார். நிலா வீட்டுக்கு வராததால் சேரன் வருத்தமாக வாசலிலேயே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த வானதி, பாண்டியனிடம் பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து இன்னும் சோழனுக்கு பயங்கர கடுப்பானது.
https://www.youtube.com/watch?v=StOoLJ1-iAE
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிலா, எதற்காக நீங்கள் எனக்கும் சோழனுக்கும் நடந்த கல்யாண விஷயத்தைப் பற்றி ராகவிடம் சொன்னீர்கள். அவர் என்னை லவ் பண்ண சொல்லி கேட்டிருந்தார். நான் தான் கல்யாணம் ஆகிவிட்டது என்று சொன்னேன். அதற்குள் நீங்கள் எல்லாம் உண்மையும் சொல்லிவிட்டீர்கள் என்று சேரனை திட்டி விட்டுப் போகிறார். இதை அறிந்த சோழன், ராகவ் சந்தித்து பேசுகிறார். பின் கோபத்தில் சோழன், ராகவை அடிக்கிறார்.






