விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ராகவ், வேலை இல்லாமல் நீ என்ன கிழிக்கிறாய் என்று பார்க்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் வானதியை பார்க்க பாண்டியன் வீட்டிற்கு வந்தார். வானதி கண்டு கொள்ளவே இல்லை. இதை கவனித்த வானதியின் பெற்றோர்கள், இவர்கள் சீக்கிரத்தில் பிரிந்து விடுவார்கள். நல்ல ஒரு ஃபாரின் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்துவிடலாம் என்றார். இன்னொரு பக்கம் வேலையை சோழனை பார்த்த நிலா, ஆபீஸில் நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனலாக அழுதார். சோழனுமே அழுதார். பின் நிலாவிற்கு சோழன் ஆறுதல் சொன்னார்.

சேரன், சந்தா வீட்டிற்கு போனார். அப்போது சேரன், நிலாவும் சோழனும் இன்னும் சேர்ந்து வாழ வில்லை. எனக்கு திருமணம் முடிந்த உடனே நிலா வீட்டை விட்டு சென்று விடுவாள். நிலா-சோழன் இருவரும் சேர்ந்து வாழணும். அதற்காக ஆறு மாதம் எனக்காக காத்திருக்க முடியுமா? என்றார். சந்தா, அனிஷ் இருவருமே சேரன் கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டார்கள். அதற்குப்பின் ராகவ் காருக்குள் ஏறிய சோழன், நிலாவை அழ வைத்ததற்காக அடிக்கிறார். ராகவ் திட்டினார்.
அய்யனார் துணை:
இருந்தாலுமே சோழன் அடிவெழுத்து வாங்கி வார்னிங் கொடுத்து விட்டு வந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சேரன் திருமணத்தை பற்றி பேசி இருந்தார்கள். நடேசன், நிலா எல்லோருமே திருமணத்தை எப்போது நடத்தலாம் என்றார்கள். சேரன், சந்தா அம்மா, அப்பா திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளட்டும். அதற்குப் பிறகு திருமணம் நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி தன்னிடம் பேசாததால் ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் நிலா, சோழன் எல்லோருமே சேரனை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார்கள். சேரன், சந்தாவின் பெற்றோர்கள் சம்மதித்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன். பாண்டியனுக்கு வேண்டுமென்றால் திருமணம் செய்யலாம் என்கிறார். பாண்டியன், அண்ணனுக்கு முதலில் நடக்கட்டும். அதற்குப் பிறகு நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறார். இருவரும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் நடேசன் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் நிலா வேலை தேடி அலைகிறார். எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் இல்லாததால் வேலை கிடைக்கவில்லை.

சீரியல் ட்ராக்:
இதனால் நிலா ரொம்பவே மனமடைந்து போயிருக்கிறார். சோழன், நிலாவிற்கு ஆறுதல் சொல்கிறார். அப்போது நிலாவின் தோழி போன் செய்து ஒரு ரெஸ்டாரண்டுக்கு வர சொல்கிறார். அப்போது நிலாவிடம் தோழி, நாங்கள் புதிதாக ஸ்டார்ட் ஆப் கம்பெனி தொடங்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு நீ 5 லட்சம் ரூபாய் கொடுத்து பார்ட்னர் ஆகி கொள். வேலைக்காக நீ சிரமப்படுகிறாய். அதற்காகத்தான் இதை சொன்னேன் என்கிறார். பின் சோழன்- நிலா இருவரும் அந்த வேலையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிலா, அவ்வளவு பணம் ரெடி பண்ண முடியாது. அந்த வேலை வேண்டாம் என்று சொல்லப் போகிறேன் என்கிறார்.






