விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலாவிற்காக பாட்டு வைத்து என்னென்னவோ சிக்னல் கொடுத்தார். நிலா, சந்தாவிடம் தான் பேசிக் கொண்டு வந்தார். பின் ஒரு வழியாக தங்களுடைய குலதெய்வ கோயில் இருக்கும் இடத்திற்கு சோழன் குடும்பத்தினர் வந்து விட்டார்கள். ஆனால், அந்த இடத்தில் ஏற்கனவே கார்த்திகா குடும்பத்தில் இருப்பவர்கள் வந்திருந்தார்கள். இதை பார்த்து கார்த்திகாவின் அம்மா பயங்கரமாக சண்டை போட்டார்.

உடனே சேரன், சோழன் எல்லோருமே நாங்கள் சாமி கும்பிட்டு போய் விடுவோம். தேவையில்லாமல் பிரச்சனை வேண்டாம் என்றார்கள். பின் இதைப்பற்றி கார்த்திகாவின் அம்மா, தன்னுடைய அண்ணனுக்கு போன் செய்து விசாரித்தார். அதற்கு அவர், குல தெய்வமே என் கனவில் வந்து சொன்னது. அதனால் தான் நான் வழி சொன்னேன். நீ எதையும் கண்டுக்காதே என்றார். பின் ரூமிற்கு சென்று எல்லோரும் ஜாலியாக கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
அய்யனார் துணை:
நிலா சமைப்பதற்காக கிச்சனுக்கு சென்னார். ஆனால், அங்கு கார்த்திகாவின் அம்மா சமைக்க விடாமல் நிலாவை திட்டினார். அப்போது வந்த சோழன், எதற்காக நீங்கள் சமைக்கிறீர்கள்? நான் ஹோட்டலில் வாங்கி கொண்டு வருகிறேன் என்று எல்லோருக்குமே சாப்பாடு வாங்கி வந்து கொண்டு வந்தார். அதற்குப்பின் எல்லோருமே உட்கார்ந்து சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கார்த்திகாவும் அவருடைய கணவருமே சாப்பிட்டார்கள். இதை பார்த்து கார்த்திகாவின் அம்மா கோபப்பட்டு திட்டினார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மறுநாள் அய்யனார் கோவிலுக்கு கிளம்புவதற்காக எல்லாருமே தயாரானார்கள். அப்போது சோழன் வேஷ்டி போட்டு வந்தார். அதை பார்த்த அவர் தம்பிகள், எதற்கு வேஷ்டி என்று கேட்டார்கள். அதற்கு சோழன், நிலா கண்டிப்பாக புடவையில் தான் வருவார். அதற்காகத்தான் நான் வேஷ்டி கட்டினேன் என்று சொன்னார். சோழன் சொன்னது போலவே நிலா சேலையில் தான் வந்தார். சோழன், நிலாவை பார்த்து வழிந்து கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=mIhnHs_LmWs
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அய்யனார் கோவிலில் கிடாவெட்டு இருப்பதால் வீட்டின் பெண்மணிகள் சில சடங்குகள் செய்யணும் என்று சொல்கிறார்கள். அதற்கு கார்த்திகாவின் அம்மா, அவர்கள் வீட்டில் பெண்களே இல்லை. அவர்கள் வீட்டிற்கு வரும் பெண் தங்கவே மாட்டாள். அவர்கள் குடும்பத்திற்கு பெண் சாபம் என்றெல்லாம் சொல்கிறார். சேரன், ஆண்கள் செய்யக்கூடிய பரிகாரம் எதுவும் இல்லையா? என்று கேட்கிறார். உடனே நிலா, என் குடும்பத்திற்காக நான் செய்கிறேன் என்று சொன்னவுடன் சேரன் குடும்பத்தில் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள்.






