விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் மீண்டும் டிராமா போட்டார். உடனே நடேசன், உன்னை பற்றி எனக்கு தெரியும். ஆனால், நீ செய்வது ரொம்ப தவறு. நிலா மனம் மாற வாய்ப்பில்லை என்று திட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் சேரன், நிலா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சேரன், சோழனுடன் சேர்ந்து வாழ சொல்லி எடுத்து சொல்லி புரிய வைத்தார். கடைசியில் நிலா, இருவருக்கும் பிடிக்காமல் நடந்த திருமணம் தான். விவாகரத்து வாங்குவது தான் சரியான முடிவு என்றார்.

நிலா, சோழன் கோர்ட்டில் பேசியதையும், சேரன் சொன்னதையும் நினைத்து பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டி வந்தார். அப்போது நிலை தடுமாறி நிலா கீழே விழுதார். இதனால் அவர் கையில் அடிபட்டு வருகிறது. அருகில் இருந்தவர்கள் நிலாவிற்கு உதவி செய்தார்கள். பின் ஆபீஸில் நிலா, தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று ராகவ், நிலாவிடம் காபி குடிக்க வெளியே அழைத்தார். நிலா, இங்கேயே ப்ராஜெக்ட் விசயமாக பேசலாம். எனக்கு வேலை இருக்கிறது என்றார். இதைக் கேட்டு ராகவ் முகம் மாறுகிறது.
அய்யனார் துணை:
அதற்குப்பின் சோழனுக்கு போன் செய்த சேரன், எதற்காக விவாகரத்தை கேட்கிறாய்? நிலாவின் மனதை மாற்றி இருவரும் சேர்ந்து வாழுங்கள் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கடைக்கு ஆட்கள் யாரும் வராததால் வானதி, நிலாவின் ராசியால் தான் இப்படி நடக்கிறது என்று ஏளனமாக பேசி இருந்தார். உடனே அந்த சமயம் பார்த்து வண்டிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் வானதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப்பின் சேரன், சந்தாவுடன் வெளியே செல்வதற்கு வீட்டிற்கு வந்து தயாராகினார்.

இன்றைய எபோசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன் பொய் சொல்லி விட்டு வெளியே போகிறார். சந்தேகப்பட்ட சோழன், அண்ணன் பொய் சொல்லி விட்டு சந்தாவை தான் பார்க்கப் போகிறார். நாம் அண்ணனை பின்தொடர்ந்து போகலாம் என்று பல்லவனை அழைத்துக் கொண்டு போகிறார். சோழன் சொன்னது போலவே சேரன், சந்தா வீட்டிற்கு தான் போகிறார். அங்கு சேரன்-சந்தா இருவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு வெளியே செல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
இதை ஒளிந்து கொண்டு பல்லவன்- சோழன் பார்க்கிறார்கள். பின் தன்னுடைய அண்ணன் சந்தோஷமாக ரொமான்டிக் செய்வதை பார்த்து இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் சந்தா, சேரன் இருவரும் கோயிலுக்கு செல்கிறார்கள். இன்னொரு பக்கம் வேலை முடித்துவிட்டு நிலா வீட்டிற்கு வருகிறார். நடேசனை நிலா நலம் விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






