விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், நடேசனுக்கு உடம்பு சரியில்லாத போன விஷயத்தை எல்லாம் சொன்னார். சேரன் தன் தந்தையை நினைத்து வருத்தப்பட்டார். அதற்குப்பின் பாண்டியன் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது வானதி வந்தார். அப்போது வானதி, பல்லவன் சொல்லும் போது நீயும் சிரிக்கிறாய். நான் என்ன டார்ச்சல் செய்தேனா? என்றார். அப்போது பாண்டியன், உண்மையாலுமே நீ டார்சல் தான் செய்தாய். உனக்கு வரவில்லை என்றால் விட வேண்டியது தானே, இதற்காக சமையல் என்ற பெயரில் இப்படி செய்தாய் என்று மீண்டும் கிண்டல் செய்தார். இதனால் கொந்தளித்த வானதி, பாண்டியனுடன் சண்டை போட்டு இனி நான் உன்னை பார்க்க வர மாட்டேன் என்றார்.

நிலா,சோழன் இருவரும் சேரன் திருமண விஷயத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். நிலா, சோழன் மீது நிறையவே அக்கறையுடனும் பாசத்துடனும் பேசிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு சோழனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்குப்பின் சந்தா, சேரனுக்கு போன் செய்து விசாரித்தார். சேரனுமே சந்தாவிற்கு ஆறுதல் சொன்னார். இது எல்லாம் கவனித்த பல்லவன், பாண்டியனிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் வானதி தன்னுடைய பெற்றோர்களிடம் தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். வீட்டில் யாருக்குமே ஒன்றும் புரியவில்லை.
அய்யனார் துணை:
வானதி, எனக்கு பாண்டியன் தேவையில்லை. எனக்கு வேறு ஒரு பையனை பார்த்து திருமணம் செய்து வையுங்கள் என்றார். இதை கவனித்த வானதி அண்ணன், பாண்டியனிடம் நேரில் சென்று வீட்டில் நடந்ததை சொன்னார். கோபத்தில் பாண்டியன் சண்டைக்கு போனார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. பின் இதைப் பற்றி வானதியிடம் அவருடைய அண்ணன் சொல்லி விட்டார். அதற்குப்பின் பாண்டியன், வானதியை சந்தித்து நடந்ததை கேட்டார். வானதி, இனிமேல் என்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. உன்னால் நான் பட்ட அவமானம் கஷ்டம் எல்லாம் போதும். நான் வேறு ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். இதுதான் என்னுடைய இறுதியான முடிவு என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி, இனிமேல் என் வாழ்க்கையில் நீ தேவை இல்லை. நான் வேறொரு திருமணம் தான் செய்யப் போகிறேன் என்று கோபமாக பேசுகிறார். பாண்டியனுமே பதிலுக்கு வானதியிடம் சண்டை போட்டு விடுகிறார். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய புது ப்ராஜெக்ட் பற்றி விவரமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து சேரனுக்கு சந்தோசமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:
நிலா பேசுவதை பார்த்து ரொம்ப பெருமைப்படுகிறார். அதற்குப்பின் அய்யனார் வீட்டில் எல்லோருமே ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாண்டியன் சோகமாக இருப்பதை பார்த்து எல்லோருமே விசாரிக்கிறார்கள். பாண்டியனும் நடந்ததை சொல்கிறார். பின் பாண்டியன் சோகமாக இருப்பதை பார்த்து சோழன்- நிலா இருவரும் அறிவுரை சொல்கிறார்கள். இருந்தாலும் வானதி பேசியது நினைத்து பாண்டியன் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.






