விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், சேரன் அண்ணனுக்கு திருமணம் ஆகாமல் எனக்கு வேண்டாம் என்றெல்லாம் யோசித்தார். ஆனால், வானதி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். பின் சேரன்- நிலா, இருவருமே எதுவாக இருந்தாலும் சீக்கிரம் முடிவெடுங்கள் என்றார். அதற்குப்பின் பாண்டியன்- வானதி இருவருமே தனியாக பீச்சுக்கு சென்று பேசினார்கள். அப்போது பாண்டியன், தன் மனதில் இருக்கும் காதலை சொன்னார்.

பாண்டியன், எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனால், சேரன் அண்ணாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. எங்கு போனாலும் அவருடைய தம்பிக்கு திருமணம் ஆனதை குறை சொல்கிறார்கள் என்றெல்லாம் எமோஷன் ஆக பேசினார். இதைக் கேட்டு வானதி, நான் வீட்டிற்கு போகிறேன். சீக்கிரமாகவே நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். பாண்டியன், பிரச்சனை இல்லையா? வீட்டில் உன்னை ஏற்றுக்கொள்வார்களா? என்றார். வானதி, நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
அய்யனார் துணை:
அதற்குப் பிறகு பாண்டியன், ஒரு புது மொபைலை வாங்கி தந்தார். பின் வானதியின் வீட்டிற்கு வந்த பாண்டியன், வானதிக்கு ஒன்றென்றால் நான் கேட்பேன் என்றார். பின் வீட்டில் எல்லோருமே வானதியை கண்ட மணிக்கு பேசினார்கள். அதற்கு வானதி, நான் இங்குதான் இருப்பேன். பாண்டியனை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்லி ரூமுக்குள் சென்று விட்டார். இன்னொரு பக்கம் சேரன் வீட்டில் எல்லோருமே புலம்பி கொண்டிருந்தார்கள். அப்போது வந்த பாண்டியன், வானதியை வீட்டில் விட்டேன். அவள் படிப்பு முடியட்டும் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, என்ன காரணத்தினால் பாண்டியன் திருமணம் வேண்டாம்? என்று சொன்னார். எல்லா ஆண்களும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் உடனே திருமணம் செய்து கொள்வார்கள். நீங்களும் அதைத்தான் பண்ணுவீர்கள். ஆனால், பாண்டியன் மறுத்த காரணம்? என்று கேட்கிறார். அதற்கு சோழன், அண்ணாவுடைய திருமணம் தான். அவருடைய திருமணம் நடக்காமல் இருப்பது பாண்டியனுக்கு கஷ்டமாக இருக்கிறது. இதைக் கேட்டு நிலா, பாண்டியனின் செயலை நினைத்து சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் வானதியின் வீட்டிற்கு போலீஸ் வருகிறது. அப்போது வானதி வீட்டில் எல்லோருமே பதறுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
வானதி, நான் தான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். என்னை என் வீட்டில் எல்லோருமே கல்லூரிக்கு போக விடாமல் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார். உடனே வானதியின் பெற்றோர்கள் அவர் காதலிக்கும் விஷயத்தை சொல்கிறார்கள். வானதி, அப்படி எல்லாம் இல்லை. நான் கல்யாணம் ஏதும் செய்து கொள்ளவில்லை. நான் படிக்க நினைக்கிறேன் என்று தன்னுடைய பெற்றோர்கள் மீது திருப்பி விடுகிறார். இதனால் போலீஸ், வானதிக்கு பிரச்சனை என்றால் உங்களை தூக்கி உள்ளே வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். இதனால் வானதியின் பெற்றோர்கள் அமைதியாகி விடுகிறார்கள். பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






